பள்ளியில் மந்திரீக பூஜை
சேலம், டிச.24- ஓமலூர் அரசு பள்ளியில் முட்டை வைத்து மந்திரீக பூஜை செய்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கமாண்டப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஓம லூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் கல்வி படிகின்ற னர். இதில், சுமார் 30 ஆசிரியர்கள் பணியாற்றுகின்ற னர். இந்நிலையில், இப்பள்ளியின் தலைமை ஆசிரி யர் அறை முன்பாக கருப்பு வட்டம், கட்டம் வரைந்து, மஞ்சள், குங்குமம், மரக்கட்டை பொம்மை மற்றும் முட்டை வைத்து மாந்திரீக பூஜை செய்யப்பட்டுள் ளது. தலைமை ஆசிரியர் அறை கதவில் மலர் மாலை மாட்டப்பட்டுள்ளது. இதைபார்த்த நடைபயிற்சிக்கு வந்த இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவில் பள்ளிக்குள் புகுந்த அடை யாளம் தெரியாத நபர்கள் விடிய விடிய மாந்திரீக பூஜை நடத்தினார்களா? அல்லது வெறோரு கார ணமா? என்று ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாந்திரீக கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
