கடலூர் அருகே விபத்து: 8 பேர் பலி
கடலூர், டிச. 24 - கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே எழுத்தூர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தின் டயர் வெடித்து விபத்துக்கு உள்ளானது. அரசுப் பேருந்து, பேரிகார்டை இடித்துக் கொண்டு (தடுப்புச்சுவர்) எதிர்புறத்தில் மோதி கவிழ்ந்ததுடன், 2 கார்கள் மீதும் மோதியது. இதில் கார்களில் பயணித்த 8 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், பலியானவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.