tamilnadu

img

24-ஆவது அகில இந்திய மாநாடு பேரெழுச்சியுடன் நிறைவு

24-ஆவது அகில இந்திய மாநாடு  பேரெழுச்சியுடன் நிறைவு

சிபிஎம் பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு

சீத்தாராம் யெச்சூரி நகர்- மதுரை, ஏப்.6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டார். ஏப்ரல் 2 அன்று மதுரை  சீத்தாராம் யெச்சூரி நகரில் (தமுக்  கம்) மிகுந்த உற்சாகத்துடன் துவங்கிய கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு, ஏப்ரல் 6 ஞாயிறன்று பேரெழுச்சியுடன் நிறைவு பெற்றது. நிறைவு நாளன்று, கட்சியின் புதிய மத்தி யக்குழுவை மாநாடு தேர்ந்தெ டுத்தது. மத்தியக்குழு புதிய மத்தியக்குழுவில் 85 பேர் இடம் பெற்றுள்ளனர். ஒரு இடம் பின்னர் நிரப்பப்படும் என  காலியாக விடப்பட்டு, 84 பேர்  தேர்வு செய்யப்பட்டனர். இவர்க ளில் 54 பேர், ஏற்கெனவே மத்தி யக்குழு உறுப்பினர்களாக இருப்  பவர்கள் ஆவர். 30 பேர் புதிய வர்கள். பெண்கள் புதிய மத்தியக்குழுவில் 20 சத விகிதம் பெண்கள் இடம் பெற்றுள்ள னர். கடந்த மத்தியக்குழுவை விட, புதிய மத்தியக்குழுவில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. கட்சி விதி களின்படி, குறைந்தபட்சம் 20 சத விகிதம் பெண்கள் கட்சி அமைப்பு களில் இடம்பெறுவது என்ற  முடிவை இம்மாநாடு அமலாக்கி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுச்செயலாளர் தேர்வு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியக்குழு பினராயி விஜயன் தலைமையில் கூடியது. கட்சி யின் பொதுச்செயலாளராக எம்.ஏ. பேபி பெயரை, முகமது சலீம் முன்மொழிய, அசோக் தாவ்லே வழிமொழிந்தார். அதைத்தொடர்ந்து, புதிய பொதுச்செயலாளராக எம்.ஏ. பேபி ஒரு மனதாக தேர்வு செய்  யப்பட்டார். அரசியல் தலைமைக்குழு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களாக எம்.ஏ. பேபி  உட்பட 18 பேர் தேர்வு செய்யப் பட்டனர். 1.     பினராயி விஜயன் 2.     எம்.ஏ. பேபி 3.     பி.வி. ராகவலு 4.     தபன்சென் 5.     நிலோத்பல் பாசு 6.     ஏ. விஜயராகவன் 7.     முகமது சலீம் 8.     அசோக் தாவ்லே 9.     ராமச்சந்திர தோம் 10.     எம்.வி. கோவிந்தன் 11.     ஜிதேந்திர சவுத்ரி 12.     கே. பாலகிருஷ்ணன் 13.     உ.வாசுகி 14.     அம்ரா ராம் 15.     ஸ்ரீதீப் பட்டாச்சார்யா 16.     விஜூ கிருஷ்ணன் 17.     மரியம் தாவ்லே 18.     ஆர்.அருண் குமார் மத்தியக்குழு  சிறப்பு அழைப்பாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பி லிருந்து நீண்டகாலம் பணியாற்  றிய பிரகாஷ் காரத் உள்ளிட்ட  தலைவர்கள், வயது வரம்பு கார ணமாக மத்தியக் குழுவிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்  களில் 7 பேர் மத்தியக்குழுவின் சிறப்பு அழைப்பாளர்களாக இடம் பெற்று வழிகாட்டுவார்கள். 1. மாணிக் சர்க்கார் 2. பிரகாஷ் காரத் 3. பிருந்தா காரத் 4. சுபாஷினி அலி 5. எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை 6. பிமன் பாசு 7. ஹன்னன் முல்லா மத்தியக்குழு நிரந்தர அழைப்பாளர்கள் மத்தியக்குழுவின் நிரந்தர அழைப்பாளர்களாக நான்குபேர் இடம்பெற்றுள்ளனர். 1. சுதீப் தத்தா 2. பால் சிங் 3. ஜான் பிரிட்டாஸ் 4. சுதன்வா தேஷ்பாண்டே மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு கட்சியின் 24-ஆவது மாநாடு, 6 பேர் கொண்ட மத்தியக் கட்டுப்  பாட்டுக் குழுவையும் தேர்வு  செய்தது. அந்தக் குழு கூடி,  கட்டுப்பாட்டுக் குழுத் தலைவ ராக ஜி.ராமகிருஷ்ணனைத் தேர்வு செய்தது. கட்டுப்பாட்டுக் குழுவில், ஜி. ராமகிருஷ்ணன், எம்.விஜய குமார், யு.பசவராஜூ, ராபின் தேவ், ஜோகேந்திர சர்மா, ரமா  தாஸ் ஆகியோர் இடம் பெற்றுள்  ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மத்தியக்குழு உறுப்பினர்கள் கட்சியின் புதிய மத்தியக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த  6 தலைவர்கள் இடம்பெற்றுள்ள னர். கே. பாலகிருஷ்ணன், உ.  வாசுகி, பி. சம்பத், பெ. சண்முகம்,  என். குணசேகரன், கே. பால பாரதி ஆகியோர் மத்தியக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய் யப்பட்டுள்ளனர். தொழிற்சங்க அரங்கத்திலி ருந்து தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.  கருமலையான், இடம்பெற்றுள் ளார்.

எம்.ஏ.பேபிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக தேர்ந்  தெடுக்கப்பட்டிருக்கும் எம்.ஏ. பேபிக்கு தமிழ்நாடு முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ‘எக்ஸ்’  பக்கத்தில் கருத்துப் பதி விட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “சிபிஐ(எம்) பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள தோழர்  எம்.ஏ. பேபிக்கு வாழ்த்துகள். மாணவர் தலைவ ராக அவசர நிலையை எதிர்கொண்டதிலிருந்து, முற்போக்கான தொலைநோக்குப் பார்வையு டன் கூடிய கேரளத்தின் கல்விக் கொள்கையை வடிவமைப்பது வரையிலான, அவரது பய ணம், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும், லட்சி யத்தை பிரதிபலிக்கிறது. மதச்சார்பின்மை, சமூகநீதி மற்றும் கூட் டாட்சிக்கான நமது ஒன்றுபட்ட பயணத்தில் மேலும் ஆழமான உறவுகளை திமுக எதிர் நோக்குகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.