திறந்த நாளிலேயே நின்று போன மணிக்கூண்டு
ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் பீகார் மாநிலத்தின் ஷரிப் என்ற பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத் தின் கீழ் ரூ.40 லட்சம் செலவில் உயரமான மணிக்கூண்டு கட்டப் பட்டு, இரண்டு நாட்க ளுக்கு முன் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் திறந்த 24 மணிநேரத்திலேயே மணிக்கூண்டின் கடிகாரம் நின்றுபோனது மட்டுமல்லா மல், மணிக்கூண்டே பொலிவிழந்தும் போயிருக்கிறது. பீகார் முதலமைச்சரின் பிரச்சார பயணத்துக்காக, மிக அவசர அவசரமாக இந்த மணிக்கூண்டு திறந்து வைக்கப்பட்டதால் ஒரே நாளில் மணிக்கூண்டு நின்று போய்விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மணிக்கூண்டுக்குள் திருடர்கள் சிலர் ஏறி, அதிலிருந்த செப்புக் கம்பிகளை திருடிச் சென்றதால் மணிக்கூண்டு பழுத டைந்துள்ளது என ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணி அரசு விளக்கம் அளித்து சமாளித்துள்ளது.