மதுரை கே.கே.நகரில் உள்ள ஸ்ரீ கின்டர் கார்டன் மழலையர் பள்ளியின் உரிமம் ரத்து செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை கே.கே. நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கின்டர் கார்டன் என்ற தனியார் மழலையர் பள்ளியில் கோடைகால சிறப்பு வகுப்புக்குச் சென்ற 4 வயது குழந்தை ஆருத்ரா, விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு திறந்து வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். 30 நிமிடத்திற்கும் மேலாக தண்ணீரில் கிடந்த குழந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால, சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இப்பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், பள்ளியின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், குழந்தை உயிரிழந்த வழக்கில், பள்ளி தாளாளர் திவ்யா ராஜேஷ், உதவியாளர் வைரமணி ஆகியோருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.