court

img

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி நியமனம்!

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் வரும் மே 13-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர்.கவாய்யின் பெயரை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை செய்தார். உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் 52ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய், வரும் மே 14ஆம் தேதி பதவியேற்கிறார். 
கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு பிறகு, பட்டியலின சமூகத்தில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகும் 2ஆவது நீதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.