வேலை நிறுத்தம், மறியல் போராட்ட ஆயத்த மாவட்ட மாநாடு
கோவை, ஏப்.29- தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகள் அமலாக்குவதை கண்டித்து மே 20 ஆம் தேதியன்று அகில இந்திய பொதுவேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட் டத்திற்கான ஆயத்த மாவட்ட மாநாடு கோவையில் செவ்வாயன்று நடை பெற்றது. ஒன்றிய மோடி அரசின் தொழி லாளர்கள், விவசாயிகள் விரோத கொள்கைகளுக்கு எதிராக 2025 மே 20 இல் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெற இருக் கிறது. இதையொட்டி நடைபெற விருக்கும் வேன் பிரச்சார இயக்கம் உள்ளிட்ட பணிகளுக்கான தயா ரிப்பு மாநாடு செவ்வாயன்று கோவை காட்டூரில் உள்ள ஏஐடி யுசி அலுவலகத்தில் எச்எம்எஸ் மாநிலத் தலைவர் டி.எஸ்.ராஜா மணி தலைமையில் நடைபெற் றது. மத்திய தொழிற்சங்கங்கள் மற் றும் துறைசார் சங்கங்கள், சம்மே ளனங்களின் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டு அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் வெற்றி பெற தங்கள் சங்கத்தின் சார்பிலான பங்களிப்பு குறித்து விவாதித்தனர். இதனைத் தொடர்ந்து, ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து, மே 20இல் நடைபெறும் பொதுவேலை நிறுத்தத்தை கோவை மாவட்டத்தில், நூறு சதம் வெற்றியடையச்செய்வது. இத னையொட்டி நடைபெறும் மறியல் போராட்டங்களில் ஆயிரக்கணக் கானோரை பங்கேற்க வைப்பது என முடிவெடுக்கப்பட்டது. இந்த ஆயத்த மாநாட்டில் சிஐ டியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டப் பொரு ளாளர் ஆர்.வேலுச்சாமி, மின் ஊழி யர் மத்திய அமைப்பின் மண்டலச் செயலாளர் டி.கோபாலகிருஷ் ணன், ஏஐடியுசி கவுன்சில் செய லாளர் சி.தங்கவேல், ஐஎன்டியுசி சண்முகம் மற்றும் ரங்கநாதன் கே.எம்.செல்வராஜ், எல்பிஎஃப் துரை மற்றும் ஆனந்த், எச்எம்எஸ் மனோகரன், எல்டியுசி ஜெயபிர காஷ், கேஎம்டிஎஸ் டி.தியாகரா ஜன், எம்எல்எப் ஷாஜகான் உள்ளிட் டோர் வேலை நிறுத்தம் போராட்டத் தின் நோக்கங்களை விளக்கி பேசி னர்.