states

img

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடரை கூட்டுக!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடரை கூட்டுக!

பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்

புதுதில்லி ஜம்மு-காஷ்மீரின் பஹல்கா மில் உள்ள பைசரன் சுற்றுலா தளத்தில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான “தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்” என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்ளது. இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொ டர்பாக எதிராக நாடாளுமன்றத் தின் சிறப்புக் கூட்டத்தொடரை கூட வேண்டும் என மக்களவை, மாநி லங்களவை எதிர்க்கட்சித் தலை வர்கள் உள்ளிட்ட 4   நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ராகுல் காந்தி (மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்):

மக்களவை எதிர்க்கட்சித் தலை வரும், காங்கிரஸ் மூத்த தலைவரு மான ராகுல் காந்தி பிரதமர் மோடி க்கு எழுதியுள்ள கடிதத்தில், “பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு தல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில், பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் எப்போதும் ஒன்றாக நிற்போம் என்பதை இந்தியா காட்ட வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படும் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. அங்கு மக்களின் பிரதிநிதிகள் தங்கள் ஒற்றுமையையும் உறுதி யையும் காட்ட முடியும். அத்த கைய சிறப்புக் கூட்டத்தை விரை வில் கூட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என அக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே (மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்) :

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவரு மான மல்லிகார்ஜுன கார்கே  பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள  கடிதத்தில்,”இந்த இக்கட்டான சூழலில் ஒற்றுமை அவசியமா னது ஆகும். அதே நேரத்தில் நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத் தொடரை விரை வில் கூட்டுவது மிக முக்கியமானது ஆகும். இது கூட்டத் தொடர் பஹல்காமில் அப்பாவி குடி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர மான பயங்கரவாதத் தாக்குத லைச் சமாளிப்பதற்கான நமது ஒற்றுமையின் உறுதி மற்றும் விருப்பத்தை இது வலுப்படுத்தும். அதனால் நாடாளுமன்ற கூட்டத் தொடர் விரைவில் நடைபெறும் என்று நம்புகிறோம்” என கடிதத்தில் கூறியுள்ளார்.

மனோஜ் குமார் ஜா (ஆர்ஜேடி) :

ராஷ்டிரிய ஜனதா தள தலைவ ரும், மாநிலங்களவை எம்.பி.,யு மான மனோஜ் குமார் ஜா, பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய நாடாளு மன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோருக்கு எழுதி யுள்ள கடிதத்தில்,”இது போன்ற தருணங்களில் ஒன்றிய அரசு, நாடு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை முழு நம்பிக்கை யுடன் ஒற்றுமையாகக் கொண்டு செல்வது அவசியம். அதனால் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடரைக் கூட்டுவது ஒற்றுமை  மற்றும் தேசத்தைப் பாதுகாப்ப தற்கு உறுதியான பாதையாக அமையும்.  அனைத்து அரசியல் கட்சிக ளுக்கும் இடையே வெளிப்படை யான உரையாடல் மற்றும் திறந்த ஈடுபாடு மக்களின் நம்பிக்கை மூலம் ஜனநாயகம் வலுப்படும். அதே போன்று சிரமங்களை சமாளிக்க தேவையான கூட்டு உறு தியை வலுப்படுத்துகிறது. மேலும், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் பஹல்காம் தாக்குதல் மற்றும் இந்திய மக்களின் பாது காப்பு, நல்வாழ்வு மற்றும் எதிர் பார்ப்புகள் குறித்த விரிவான விளை வுகள் குறித்து ஒரு திறந்த மற்றும் நெறிமுறையான விவாதத்திற்காக மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். இது நாட்டு மக்களுக்கு ஒரு சக்திவாய்ந்த மற்றும் நம்பிக்கை யூட்டும் செய்தியை வழங்கும் என கோரிக்கை விடுத்தார்.

சந்தோஷ் குமார் (சிபிஐ) :  

ஒன்றிய நாடாளுமன்ற விவகா ரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின்  மாநிலங்களவை எம்.பி., சந்தோஷ் குமார் எழுதியுள்ள கடி தத்தில்,”பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்த இத்தகைய தரு ணத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட வேண்டும். இந்த கூட்டத் தொடரில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒரே குர லில் ஒன்றுகூடி இழப்பை துக்கப் படுத்தவும், நாட்டின் விருப்பத்தை வெளிப்படுத்தவும், பயங்கரவாதச் செயல்கள் மூலம் நமக்குத் தீங்கு விளைவிக்க முயல்பவர்களுக்கு எதிராக இந்தியா ஒற்றுமையாக வும் உறுதியாகவும் உள்ளது என்ற தெளிவான மற்றும் வலுவான செய்தியை கூறவும் உதவும். மக்க ளின் உணர்வை வெளிப்படுத்த அரசியல் பிளவுகளுக்கு அப்பால் நாடாளுமன்றம் உயர வேண்டும். தேசிய அளவிலான துக்கமிக்க இந்த தருணத்தில் ஜனநாயகத்தின் மிக உயர்ந்த மன்றத்திலிருந்து (நாடாளுமன்றம்) ஒற்றுமையின் கூட்டு வெளிப்பாடு, சரியான நேரத் தில் தேவையானதாகவும் இருக் கும்” என அவர் கூறினார். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அன்று உச்சநீதிமன்ற பார் கவுன் சில் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.,யுமான கபில் சிபல் பஹல் காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.