இடுக்கியில் எல்டிஎப் மாநாடு; பினராயி விஜயன் உரையாற்றினார்
கேரள மாநிலம் இடுக்கியில் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) சார்பில், மாநில அரசுக்கு ஆதரவாக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உரையாற்றினார். மாநாடு நிறைவு பெற்ற பின்பு தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் பினராயி விஜயன் கூறுகையில்,”இடது ஜனநாயக முன்னணி இடுக்கி மாவட்டக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநில அரசுக்கு ஆதரவாக நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றியதோடு, இந்த அற்புதமான அனுபவத்தை மறக்கமுடியாததாக ஆக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்” என கூறினார்.