tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழ் வார விழா போட்டிகள் துவக்கம்

சேலம், ஏப்.29- தமிழ் வார விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்ட மைய நூலகத்தில் மாணவ, மாணவிகளிடையே போட்டி கள் நடத்தப்பட்டன. ஏப்.29 ஆம் தேதி துவங்கி ஒரு வாரம், தமிழ் வார விழா  கொண்டாடவும், அலுவலகத்தில் தமிழ் மொழி பயன் பாட்டை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகள் அறிவி யல் மற்றும் கணினி தமிழ் குறித்து வினாடி வினா  நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் நிகழ்ச்சி கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்ட மைய நூலகத்தில் மாணவ, மாணவி களுக்கிடையே செவ்வாயன்று நடைபெற்ற கட்டுரைப்  போட்டியினை மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி துவக்கி வைத்தார். தொடர்ந்து, தமிழ் மொழிப் பயன் பாட்டை உக்குவிக்கும் வகையில் கையெழுந்துப் போட்டிகள், அறிவியல் மற்றும் கணினி தமிழ் குறித்த வினாடி – வினா, பேச்சுப்போட்டி, கதை சொல்லும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலர் விஜயகுமார், தமிழ் வளர்ச்சித் துறை கண்காணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

அம்ரூத் திட்டத்தால் எந்த பலனும் இல்லை நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வேதனை

நாமக்கல், ஏப்.29- ஒன்றிய அரசின் அம்ரூத் திட்டத்தால் எந்த பலனும்  இல்லை, என பள்ளிபாளையம் நகர்மன்றக் கூட்டத்தில்  வார்டு உறுப்பினர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ள னர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகர்மன்ற சாதாரணக் கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் செவ்வா யன்று நடைபெற்றது. நகராட்சி ஆணையர் தயாளன் முன்னிலை வகித்தார். நகரமன்றத் தலைவர் செல்வ ராஜ், துணைத்தலைவர் பாலமுருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். இக்கூட்டத்தில், வார்டு உறுப்பி னர்கள் பேசுகையில், தங்கள் பகுதியில் முறையாக குடி நீர் வருவதில்லை. அம்ருத் 2.0 திட்டத்திற்காக தோண்டப் பட்ட பள்ளங்கள் முறையாக மூடாததால், தொடர்ந்து  பொதுமக்கள் மத்தியில் புகார்கள் எழுவதாக, தெரிவித்த னர். இதற்கு பதிலளித்து பேசிய நகர்மன்ற துணைத் தலைவர் பாலமுருகன், பல்வேறு பகுதிகளில் புறக் கணிக்கப்பட்ட மத்திய அரசின் அம்ரூத் 2.0 திட்டத்தை பள்ளிபாளையம் நகராட்சியில் கொண்டு வந்தோம். ஆனாலும், கடந்த ஓராண்டுகளுக்கு மேலாகவே தொடர்ந்து பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. குடிநீர் குழாய் இணைப்பு தருகிறோம் என, நகரின் பல் வேறு பகுதிகளில் சாலையை சேதப்படுத்தி, பள்ளங் களை தோண்டி வைத்து விடுகிறார்கள். இதன் காரண மாக பொதுமக்கள் அந்த சாலையை பயன்படுத்த முடி யாத நிலை உள்ளது. துறை சார்ந்த அதிகாரியிடம் கேட் டாலும், முறையான பதில் வருவதில்லை. பொதுமக்க ளுக்கு முறையான குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது.  தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் நகர்மன்றக் கூட்டத்தில்  அம்ருத் திட்டத்தில் உள்ள பாதிப்புகள் குறித்து மட்டுமே  பேச முடிகிறது. மற்ற துறை சார்ந்த விஷயங்களில் கவ னம் செலுத்த முடியாமல் உள்ளது. எப்போதும் கேட்டா லும் தண்ணீர் வராத நிலையே உள்ள நிலையில் அந்தத் திட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது? வார்டு பகுதியில் மக்கள் கேள்வி கேட்கும் போது மக்க ளுக்கு பதில் சொல்ல முடியாத நிலை இருப்பதாக வேதனை தெரிவித்தார்.  இதனை ஆமோதித்து பேசிய வார்டு கவுன்சிலர் கள் தொடர்ச்சியாகவே தங்கள் பகுதியிலும் இதே பிரச் சனை நிலவு வருவதாகவும், இதற்கு மாற்று ஏற்பாடு களை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.  இதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், தற்போது பணிகள் அனைத்தும் முடிவு பெறும் தரு வாயில் உள்ளது. விரைவில் பிரச்சனைகளுக்கு தீர்வு  காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தார்.

குட்கா கடத்திய இருவர் கைது

தருமபுரி, ஏப்.29- மாரண்டஅள்ளி அருகே காரில் குட்கா பொருட் களை கடத்தி வந்த 2 பேரை காவல் துறையினர் கைது  செய்தனர். தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள  கொலசனஅள்ளி நெடுஞ்சாலையில், மாரண்டஅள்ளி காவல் ஆய்வாளர் சுப்ரமணியம் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது, வெள்ளிசந்தை நோக்கி வந்த சொகுசு  காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில்  ரூ.2 லட்சம் மதிப்பிலான 156 கிலோ குட்கா பொருட் களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டு நரிடம் விசாரணை மேற்கொண்டதில், கிருஷ்ணகிரி மாவட்டம், கொத்தபள்ளியைச் சேர்ந்த சிராஜ் (25),  கர்நாடகா மாநிலம், சிக்ககொல்லரஅட்டி கிராமத்தைச்  சேர்ந்த திலக்குமார் (24) ஆகியோர், பெங்களூரு விலிருந்து ஈரோட்டிற்கு குட்கா பொருட்களை கடத்தி  சென்றது தெரிய வந்தது. இதையடுத்து காருடன், குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இரு வரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி தரு மபுரி சிறையில் அடைத்தனர்.