tamilnadu

தமுஎகச மாநில மாநாட்டு வரவேற்புக் குழுவுக்கு நன்றி தெரிவிப்பு

தமுஎகச மாநில மாநாட்டு வரவேற்புக் குழுவுக்கு நன்றி தெரிவிப்பு

தஞ்சாவூர், ஜன.14 -  தமுஎகச 16 ஆவது மாநில மாநாட்டு வரவேற்புக் குழுவுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் தஞ்சையில், தமு எகச மாவட்டத் தலைவர் முருக.சரவணன் தலைமையில்  நடந்தது. கூட்டத்தில், மாநில மாநாட்டு வரவேற்புக் குழு தலைவரும், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருமான ச.முரசொலி, தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராம லிங்கம், மாநில துணைத் தலைவர் ஆதவன் தீட்சண்யா,  மாநில பொதுச் செயலாளர் களப்பிரன் ஆகியோர் பங்கேற்றனர்.  வரவேற்புக்குழு தலைவர் ச.முரசொலி, மாநில  பொதுச் செயலாளர் களப்பிரன் ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர். கலைஞர் பொற்கிழி பரிசு பெற்ற தமுஎகச மாநில துணைத் தலைவர் ஆதவன் தீட்சண்யாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சால்வை அணிவித்து கௌர வித்தார். ஆதவன் தீட்சண்யா சிறப்புரையாற்றினார். மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் நிறைவுரை யாற்றினார்.  தமுஎகச மாவட்டச் செயலாளர் ப.சத்தியநாதன் மாநில மாநாட்டு வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித் தார். மாவட்டக் குழு உறுப்பினர் சாகுல் நன்றி கூறினார்.   மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.வேலாயுதம், மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜயகுமார், வெற்றித்  தமிழர் பேரவை பொறுப்பாளர் செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.