tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கிராமப்புற பள்ளி மாணவர்களின் கல்வி வாய்ப்பை அலட்சியப்படுத்தும் தாராபுரம் அரசுப் பேருந்து நிர்வாகம்

திருப்பூர், அக். 10 - திருப்பூர் மாவட்டம் தாராபுரம்- குண் டடம், ஜேடர்பாளையத்தில் இயங்கி  வரும் மாதிரிப் பள்ளியின் மாணவர்கள்  பெரும்பாலானோர் குள்ளாய்பாளை யம், நொச்சிப்பாளையம்,  நல்லி மடம்,  வரப்பாளையம், இடையன் கிணறு,  போன்ற கிராமங்களில் இருந்து வரு கின்றனர். குறிப்பாக 50- க்கும் மேற்பட்ட  மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரி யர்கள் அந்த வழித்தடத்தில் இயங்கி  வரும் அரசு புறநகர்ப் பேருந்து எண் 12 -ஐ   நம்பியே அந்தப் பள்ளிக்கு சென்று வரு கிறார்கள். இந்த நிலையில் தாராபுரம் அரசு  பேருந்து பணிமனை அதிகாரிகள், அந்த  பேருந்திற்கு, தினமும் புதிதாக வரும்  ஓட்டுநர், நடத்துநர்களை அனுப்புவ தாக கூறப்படுகிறது. அவர்களுக்கு அந்த வழித்தடத்தில் இருக்கும் நிறுத் தங்கள் பற்றி தெளிவாகத் தெரியாமல்,  சரியாக அந்த வழித்தடத்தில் பேருந்தை  இயக்காமல் நேராக குண்டடம் சென்று  விடுகின்றனர். இதனால் மேற்கண்ட கிராமங்களில் இருந்து வரும் பள்ளி  மாணவர்களின் படிப்பு கேள்விக்குறி யாகி நிற்கிறது. பேருந்து தொடர்ச்சி யாக இயக்கப்படாமல் விட்டால் அந்த  மாணவர்களது கல்வி வாய்ப்பு பாதிக் கப்பட்டு இடை நிற்றல் ஏற்படக்கூடிய  ஆபத்து உள்ளது. எனவே இந்த கிராமப்புற மாணவர் கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதற்கு, அந்த வழித்தடத்தில் தடையின்றி பேருந் துகளை இயக்குவதை மாவட்ட ஆட்சி யர் உத்தரவாதப்படுத்த வேண்டும்  என்று தாராபுரம் ஐயன் திருவள்ளுவர்  இலவசப் படிப்பகத்தை சேர்ந்த வே.ப. இராசாமணி பொது மக்கள் சார்பாக  கோரியுள்ளார். ஆட்சியர் கவனத்துக் குச் செல்வதுடன், தொடர்புடைய பள் ளிக்கல்வித்துறை அதிகாரிகள், அரசு  போக்குவரத்து துறை அதிகாரிகள்  இந்த விசயத்தில்கவனம் செலுத்தி,  பள்ளி மாணவர்களின் படிப்பில் அலட் சியமாக நடந்து கொள்ளும் தாராபுரம்  அரசு பேருந்து பணிமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி நேரத்தில் பேருந்தை தடை யின்றி இயக்குவதற்கும், மாணவர்க ளின் எதிர்கால நலனைப் பாதுகாப்ப தற்கும் ஆவண செய்ய வேண்டும் என்று  பெற்றோர்களும், பொதுமக்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இ-சேவை மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

திருப்பூர், அக்.10- திருப்பூர் மாநகராட்சி முதல் மண் டல அலுவலக வளாகத்திற்குள் தமிழ் நாடு அரசின் இ-சேவை மையம் கடந்த  ஒரு மாதமாக செயல்படாமல் உள்ளது.  உடனடியாக மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக் கப்பட்டுள்ளது. 11 ஆவது வார்டு மாமன்ற உறுப்பி னர் எஸ்.செல்வராஜ் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல  அலுவலக வளாகத்திற்குள் தமிழ்நாடு  அரசின் இ-சேவை மையம் செயல்பட்டு  வந்தது. இதனால் இப்பகுதி மக்கள்  பெரும் பயனடைந்து வந்தனர். தற் போது கடந்த ஒரு மாத காலமாக சேவை  மையம் செயல்படவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை. மக்கள் தொகை அதிகம் உள்ள இப்பகுதியில் அரசின் இ-சேவை மையம் செயல்ப டாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனால், இப்பகுதி மக் கள் போக்குவரத்து வசதியில்லாத வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சூரியகாந்தி விதை ஏலம்

திருப்பூர், அக்.10- வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்  கூடத்தில் இந்த வாரம் எடப் பாடி, லந்தக்கோட்டை, வெள்ளாளப்பட்டி, பாலப் பட்டி, இளங்கனூர், லக்கம நாயக்கன்பட்டி ஆகிய இடங் களில் இருந்து 37 விவசாயி கள் 688 மூட்டைகளில் 34 டன்  விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.  ஈரோடு, காரமடை, சித் தோடு, பூனாட்சி, காங்கயத் தைச் சேர்ந்த 5 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனர். கிலோ ரூ.58. 14 முதல் ரூ.66.19 வரை விற்ப னையானது. சராசரி விலை  ரூ.65.39. ஒட்டுமொத்த விற்ப னைத் தொகை ரூ.21.76 லட் சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக திருப் பூர் விற்பனைக்குழு முது நிலை செயலாளர் எஸ்.சண் முகசுந்தரம் தெரிவித்தார்.

திருப்பூரில் ஆய்வு கூட்டம்

திருப்பூர், அக்.10- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும்  பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய் வுக்கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது.