tamilnadu

அக்.5-7 பழனியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில மாநாடு

அக்.5-7 பழனியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில மாநாடு

பழனி, அக்.3 - தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 10 ஆவது மாநில மாநாடு  திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அக்டோபர் 5, 6, 7 ஆகிய தேதிகளில்  நடைபெறுகிறது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் டில்லிபாபு செய்தி யாளர்களிடம் கூறியதாவது:  ஒன்றியத்தில் நரேந்திர மோடி  தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பிறகு, இந்தியா முழுவதும்  பழங்குடி மக்களின் நிலை ஒரு  மோசமான நிலைமைக்கு பின்னோக் கிச் சென்று கொண்டிருக்கிறது. குறிப் பாக இந்திய வன உரிமைச் சட்டம்  2020-23-ஐ முழுமையாக அமல்படுத் தாமல் உள்ளது.  வட மாநிலங்களில் மலைப் பிரதே சங்களில் வசிக்கும் பட்டா இல்லாத  பழங்குடி மக்களை வெளியேற்றி விட்டதாகவும், மகாராஷ்டிரா - சத்தீஸ் கர் போன்ற மாநிலங்களில் 2 லட்சம்  மரங்களை வெட்டி எடுத்து விட்டு,   அதானி-அம்பானி போன்றவர்களுக்கு அந்த இடத்தை கொடுத்து, அவர் கள் புதிய நிறுவனங்கள் அமைப்ப தற்கு அனுமதி அளித்துள்ளது. இயற்கை வளங்களை அழித்து அந்த இடங்களை தனியாருக்கு ஒப்ப டைக்கவும் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.  அந்தச் சட்டத்தை தமிழகத் திற்கு கொண்டு வந்தால், பழங்குடி  மக்கள், மலைப் பிரதேசங்களில்  வாழ்பவர்கள் வெளியேற்றப்படு வார்கள். மேலும், தமிழ்நாட்டின் மலைப் பிரதேசங்களில் இயற்கை யாக கிடைக்கும் பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற கனிம வளங் களை வெட்டி எடுப்பதற்கு, ஐந்து  இடங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறது. இதை எடுத்தால் இயற்கை வளம் குன்றிப் போகும்; இதற்கு அனுமதி வழங்கக் கூடாது.  வன உரிமைச் சட்ட அரசாணை  104-ஐ உடனடியாக மாநிலம் முழு வதும் அமல்படுத்தி பழங்குடியின ருக்கு இனச் சான்று வழங்க வேண்டும். புலையன், ஈரோடு மாவட் டம் மலையாளி வேட்டைக்காரன், குறவன் மற்றும் குருமன்ஸ் மக்களை,  பழங்குடி பட்டியலில் இணைத்திட வேண்டும்.  மலைப் பகுதிகளுக்கு பட்டா வழங்க தடையாக உள்ள ஆணை 11-68/1989-ஐ ரத்து செய்யவும் காலிப் பணியிடங்களை நிரப்பிட வும், வீடற்ற பழங்குடி மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாவும் தரமான வீடு களும் கட்டிக் கொடுக்க வேண்டும். உண்டு உறைவிட பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதி, மாணவர் களுக்கு பாதுகாப்பு வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநில மாநாடு நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார். சிபிஎம் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் செல்வராஜ்,  வரவேற்பு குழு செயலாளர் தா. அஜாய் கோஷ், வரவேற்பு குழு பொருளாளர் எஸ்.கமலக்கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ராமசாமி,  விவசாயத் தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் கே.அருள் செல்வன், நகர் மன்ற துணைத் தலைவர் கே. கந்தசாமி, வரவேற்பு குழு துணைத் தலைவர் எம். ஈஸ்வரன், வசந்தா மணி ஆகியோர் உடனிருந்தனர்.