சென்னை, பிப். 11 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திங்க ளன்று அமைச்சரவை கூட்டம் நடை பெற்றது. துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரை முருகன், நேரு உட்பட அமைச்சர் களும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், வேலூர், தூத்துக்குடி, திருச்சியில் ரூ. 7,375 கோடி மதிப்பில் தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.