tamilnadu

தமிழ்நாடு ‘நம்பர் ஒன்’ மாநிலமாக இருப்பதே எனக்குப் பெருமை!

விழுப்புரம், ஜன. 28 - விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூக நீதிப்போராளிகளுக்கான  நினைவுகூரும் வகையில் மணிமண்டபம்,   முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமி நினைவு அரங்கம் ஆகியவற்றை செவ்வா யன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: 21 சமூகநீதி போராளிகள் 1987-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சுட்டுக்கொல்லப்பட்டா ர்கள். அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை உருவாக்கி 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மேலும் உயிர்த் தியாகம் செய்த குடும்பத்தாருக்கு மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ராமசாமி படையாச்சிக்கு சென்னையில் சிலை அமைக்கப்பட்டது.வன்னியர் பொதுச் சொத்து வாரியம் அமைத்தது திமுக ஆட்சியில்தான். தற்போது சமூகநீதி போராளிகளுக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. திராவிட இயக்கம் தோன்றியதே சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகத்தான். 

திங்களன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்துக்கான தேவைகள் கண்டறியப்பட்டன. அதன்படி நந்தன்கால்வாய்க்கு ரூ. 304 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு, ரூ. 84 கோடியில் தளவா னூர் தடுப்பணை, காணையில் ரூ. 35 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம், திருவாமாத்தூரில் ரூ. 4 கோடி மதிப்பில் திருமண மண்டபம், விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகம் ரூ. 2 கோடி மதிப்பில்  டவுன் ஹால் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்களை அறிவிக்கிறேன். என்னை பொறுத்தவரை நம்பர் ஒன் முதல்வர் என்பதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே இலக்கு. இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டார்.