நாமக்கல், ஜன.29- குமாரபாளையம் அருகே உள்ள வளை யக்காரனூர் பகுதியில் ஜல்லிக்கட்டு நடை பெறுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், கடந்த ஏழு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. இந்த ஆண்டு வளையக் காரனூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி பிப்.1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத னையொட்டி முன்னேற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளதா? என வருவாய் கோட் டாட்சியர் தலைமையிலான கூட்டுக்கமிட்டி குழுவினர் புதனன்று ஆய்வு மேற்கொண்ட னர். வாடிவாசல் போதிய பாதுகாப்புடன் உள்ளதா? பார்வையாளர் பகுதிகள் பாது காப்பான ஏற்பாடுகள் உள்ளதா? மாடுகள் வரிசையாக விடும் பகுதியில் போதிய பாது காப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். இதன்பின் வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, குறைகளை உடனடியாக சரி செய்து வைக்கு மாறும் தன்னார்வலர்களை உடனடியாக ஏற்பாடு செய்து அவர்களுடைய பெயர் பட்டி யலை தயார் செய்து வைக்கும்படியும் உத்தர விட்டார்.