districts

img

கேட்பாரற்று நிறுத்தப்பட்ட வாகனங்கள் அகற்றக்கோரி போலீசார் நோட்டீஸ்

கோவை, ஜன.29- உக்கடம் சாலையில் கேட்பாரற்று நிறுத்தப்பட்ட வாக னங்களை, உரிமையாளர்கள் உடனடியாக அகற்ற வேண் டும் என போலீசார் வாகனங்களில் நோட்டீஸ் ஒட்டிச் சென் றனர்.  கோவை மாவட்டம், உக்கடம் அல் அமீன் காலனி, ரோஸ்  கார்டன் நுழைவு வாயிலில் சாலை ஓரத்தில் இருபுறங்களி லும் பொதுமக்களுக்கு இடையூறாக கேட்பாரற்று ஏராள மான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அவ்வழி யாக செல்வோர் வீசிச் செல்லும் குப்பைகளும் அகற்றப்படா மல் இருந்தது. இதனால், அல் அமீன் காலனி பொது மக்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உக்கடம் பிர தான சாலையில் மறியலில் ஈடுபடப் போவதாக அறிவித்த னர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கோவை மாநக ராட்சி அதிகாரிகள் மற்றும் கடைவீதி போலீசார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து உடனடி யாக அப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை மாநக ராட்சி ஊழியர்கள் முழுமையாக அகற்றினர். இதைத்தொ டர்ந்து சாலையின் இரு புறங்களிலும் நீண்ட நாட்களாக கேட் பாரற்று இருந்த கார்கள், ஆட்டோக்கள், வேன்கள் என சுமார் 50 வாகனங்களை  உடனடியாக வாகன உரிமையாளர்கள் அகற்ற வலியுறுத்தும் வகையில் “தங்கள் வாகனங்களை அகற்ற வேண்டும். இல்லையென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படும்” என்ற எச்சரிக்கை வாசகங்களுடன் போலீசார் நோட்டீசை ஒட்டி சென்றனர்.