முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் வசிப்பிட அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தொடர்ந்து சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை செய்த பின்னர், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
50% முதுநிலை மருத்துவ இட ஒதுக்கீடு ரத்து மூலம் 1207 இடங்கள் பறிபோகும் அபாயம் உள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான மாநில இடஒதுக்கீட்டில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.