கட்டுமானப் பொருட்களின் விகிதாச்சாரம் விதொச வலியுறுத்தல்
ஈரோடு, ஜன.29- கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் கட்டுமானப் பொருட் களுக்கான விகிதாச்சாரத்தைக் குறைக்க வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு செயலாளரிடம் விதொச அமைப்பினர் அண்மையில் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது, வேளாண் தொழிலும், அதன் சார்பு தொழில்களிலும் தமிழ்நாட்டில் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். கிராமப்புறங்களில் வேலை முற்றிலுமாக இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது. இத னால், வேலையின்மை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் அவர்க ளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. நடப் பாண்டில் போதிய அளவில் வேலை வழங்காத நிலை உள்ள தால், வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவை ரூ.1000 கோடிக்கு மேல் உள்ளது. தொடர்ச்சியாக வேலையும், தாமதமில்லாமல் ஊதியமும் வழங்க வேண்டும். சட்டத்தில் உள்ளவாறு ஊதியம் மற்றம் பொருட்கள் செலவின விகிதம் 60க்கு 40 என்ற அளவிற்கு மிகாமல் நிறைவேற்றினால், பெறும் ஊதியம் கிராமப்புற குடும்பங்களின் வாழ்க்கை மேம் பாட்டிற்கு பேருதவியாக இருக்கும். கட்டுமானப் பொருட் களுக்கான விகிதாச்சாரத்தை குறைத்திட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இம்மனுவினை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மா.சின்னதுரை எம்எல்ஏ, பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட துணைத்தலைவர் கே.பி.கனகவேல் ஆகி யோர் வழங்கினர்.
அரசுப்பள்ளி மைதானத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதா?
உதகை, ஜன.29- அரசுப்பள்ளி காந்தி மைதா னத்தை தனியார் பள்ளிக்கு தாரை வார்க்கும் முயற்சிகள் நடைபெறு வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி பகுதியில் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான காந்தி விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தை உதகை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர் களும் பயன்படுத்தி வந்தனர். இந் நிலையில், அந்த பள்ளி மைதான பராமரிப்பு பணிகளை தனியார் பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள திட் டமிட்டது. மேலும், அந்த மைதா னத்தை பயன்படுத்த அனுமதிக்க வலியுறுத்தி தனியார் பள்ளி சார் பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசு பள்ளிக்கு சொந்தமான மைதானத்தை, தனி யார் பள்ளி நிர்வாகத்திற்கு எவ் வாறு வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பி, அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டும் பயன்படுத்த உத்தரவிட் டது. மேலும், அந்த மைதானத்தை சரியாக பராமரிக்கவும் அறிவு றுத்தியது. இதை தொடர்ந்து நுழைவுவாயில் கதவுகள் சரி செய்யப்பட்டன. நீண்ட நாட்களாக போட்டிகள் எதுவும் நடக்காததால் மைதானம் புதர் மண்டி உள்ளது. இந்நிலையில், இந்த மைதா னத்தை மீண்டும் தனியார் பள்ளி பயன்படுத்த முயற்சி செய்து வருவ தாக கூறப்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மிகவும் பாரம்பரியம் வாய்ந்த இந்த மைதானத்தில் மகாத்மா காந்தி வந்து பேசினார் என்பதால், காந்தி மைதானம் என பெயரிடப் பட்டது. பள்ளிக்கல்வித்துறை கட் டுப்பாட்டில் இந்த மைதானத்தை வைத்து அரசுப்பள்ளி மாணவர்க ளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண் டும். தனியார் பள்ளிக்கு வழங்கக் கூடாது, என்றனர். இதற்கிடையே உதகை அரசு பள்ளி மைதான விவகாரம் தொடர் பாக உதகை ஆர்டிஒ சதீஸ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் நந்தகுமார், நகராட்சி அதிகாரி கள், நில அளவைத்துறை அலுவ லர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் செவ்வாயன்று அந்த மைதானத்தில் திடீர் ஆய்வு மேற் கொண்டனர். இதுகுறித்து உதகை ஆர்டிஒ சதீஸ்குமார் கூறுகையில், 3 பேர் அடங்கிய குழு அமைக் கப்பட்டு உதகை ஏடிசி பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு சொந்த மான மைதானத்தில் ஆய்வு நடத் தப்பட்டது. மைதானம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை கேட் டுள்ளது, ஆய்வுக்கு பிறகு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு முடிவு செய்யப் படும், என்றார்.
நூறுநாள் வேலை திட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியம் நிலுவை
ஈரோடு, ஜன.29- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 2 மாதங்க ளாக ஊதியம் வழங்கப்படவில்லை, எனவே ஊதியத்தை நிலுவையின்றி வழங்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஈரோடு மாவட்டம், மொடக் குறிச்சி வட்டத்திற்குட்பட்டது எழு மாத்தூர் கிராம ஊராட்சி. இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பட்டிய லினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் கடந்த 2 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இது குறித்து குடியரசு தினத்தன்று நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் வார்டு உறுப்பினரும், விவ சாயத் தொழிலாளர் சங்க நிர்வாகியு மான தங்கவேல் கொடுத்த மனு வில், கிராமப்புற விவசாய தொழிலா ளர்கள் கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் மூலம் பயனடைந்து வந்த னர். அவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்க வேண்டும், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அலைக் கழிப்புகளுக்குப் பின்னர் வங்கி மூலம் வாரந்தோறும் ஊதியம் வழங் கப்பட்டு வந்தது. தற்போது ஒன்றிய மோடி அரசு 2 மாதமாக ஊதியம் அளிப்பதை நிறுத்தி உள்ளது. இத னால் அத்தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே, நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நிலுவை யின்றி ஊதியம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற மனு அளித்தார். மேலும், ஊராட்சியில் சிதிலமடைந்த வீடுகளை இடித்து விட்டு புதுவீடு கட்டித்தர வேண்டும். பட்டா வழங்க வேண்டும். தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியு றுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.
போலி நகைகள் மூலம் ரூ.41 லட்சம் மோசடி
போலி நகைகள் மூலம் ரூ.41 லட்சம் மோசடி சேலம், ஜன.29- கெங்கவல்லியில் போலி நகைகளை அடகுவைத்து ரூ. 41 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை போலீ சார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லியிலுள்ள தேசியமய மாக்கப்பட்ட வங்கியில், வேறு வங்கியின் நகை மதிப்பீட்டா ளர்கள் அடகு வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்தனர். அதில், இருவர் 84 பவுன் போலி நகைகளை அடகுவைத்து ரூ.41 லட்சம் கடன் பெற்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து வங்கியின் மேலாளர் மித்ராதேவி, வங்கியின் நகை மதிப்பீட்டாளர் பாலசந்தரிடம் விசாரணை செய்தார். அதில், 84 பவுன் போலி நகை என்பது தெரியவந்தது. பாலசந்தர் தரப்பில் ஜன.27 ஆம் தேதிக்குள் அனைத்து பணமும் செலுத்தி விடுவதாக வங்கி உயரதிகாரிகள் மற்றும் மேலாளரிடம் உறுதி யளித்ததாக தெரிகிறது. ஆனால், மோசடி செய்த முழுத் தொகையையும் செலுத்தாததால் கெங்கவல்லி காவல் நிலை யத்தில் புகாரளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நகை மதிப்பீட்டாளர் பால சந்தரை கைது செய்து, ஆத்தூர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி னர். கைது செய்யப்பட்ட நகை மதிப்பீட்டாளர் பாலசந்தர் (44), ஏற்கெனவே நடுவலூர் வங்கிக் கிளையில் பல மோசடிகளை செய்ததால், அவர் கெங்கவல்லி கிளைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல் உதவி ஆய்வாளர் மீது புகார்
காவல் உதவி ஆய்வாளர் மீது புகார் சேலம், ஜன.29- பாதிக்கப்பட்டவருக்கு விரோதமாக செயல்படும் சூர மங்கலம் காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. சேலம், குரங்குசாவடி பகுதியைச் சேர்ந்த முருகேசன் (48) என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் சூரமங்கலம் பகுதியில் குமரவேல் என்பவருக்கு சொந்தமான கடையை கடந்த ஐந்து ஆண்டுகளாக கடையை வாடகைக்கு எடுத்து தனது அலுவலகமாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடையை காலி செய்யக்கோரி, குமரவேல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளார். ஆனால், அதற்குள் தனது அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் மதிப்பி லான பீரோவில் இருந்த அசல் ஆவணங்கள், பணம், சேர் கள் மற்றும் ஏசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் எடுத் துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக குமரவேலிடம் கேட்ட போது, தான் எடுக்கவில்லை எனக்கூறி தகாத வார்த்தைக ளால் திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரண்டு வாகனங்களின் உதவியுடன் அலுவலகத்தில் இருந்த பொருட் களை எடுத்துச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சியுடன் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து திருட்டை உறுதி செய்த நிலையிலும், பாதிக்கப்பட்டவருக்கு விரோத மாக காவல்துறை அதிகாரிகள் செயல்படுகின்றனர். எனவே, காவல் உதவி ஆய்வாளர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என முருகேசன் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செவ் வாயன்று புகாரளித்தார்.
உடுமலையில் உயர்ந்த தரத்தில் வெண்பட்டு உற்பத்தி
உடுமலையில் உயர்ந்த தரத்தில் வெண்பட்டு உற்பத்தி உடுமலை, ஜன. 29 - சேலம், மத்திய பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம், தமிழக பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செவ்வாயன்று உடு மலை அருகேயுள்ள பூளவாடியில், பட்டு விவசாயிகளுக் கான விழா, மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், நிலையான வெண்பட்டு உற்பத்தி, மல்பெரி சாகு படியில் சொட்டுநீர் உரப்பாசனம் உள்ளிட்டவை குறித்து விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடைபெற் றது. முன்னதாக பெங்களூரு மத்திய பட்டு வாரிய தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் உறுப்பினர் செயலர் சிவக்குமார் தலைமையில் சேலம் ஆர்.எஸ்.ஆர்.எஸ் தலைவர் மற்றும் விஞ்ஞானி தாஹிராபீவி விழாவை துவக்கி வைத்தார். பெங்க ளூரு மத்திய பட்டு வாரிய தொழில்நுட்ப இயக்குனர் மந்திர மூர்த்தி மற்றும் மைசூரு பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் காந்திதாஸ் பங்கேற்று சிறப்புரை யாற்றினர். விழாவில், பட்டு விவசாயிகள், மற்றும் பட்டு நூற் பாளர்கள் கலந்து கொண்டனர். இதில், பெங்களூரு மத்திய பட்டு வாரிய தொழில்நுட்ப இயக்குனர் மந்திரமூர்த்தி பேசுகையில், இந்தியாவில் ஜவு ளித்துறையில் பருத்தி, பட்டு, சணல், கம்பளி என நான்கு வகையில் தான் அதிகளவு உற்பத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பருத்தி உற்பத்திக்கு அடுத்தபடியாக பட்டு உற்பத்தி உள்ளது. இந்தியாவில் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந் திரா, மேற்கு வங்க மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. குறிப் பாக வெண்பட்டு உற்பத்தியில் உடுமலை பகுதியில் மட்டும் தான் உயர்ந்த தரத்துடன் அதிகளவு உற்பத்தி செய்யப்ப டுகிறது. எனவே இப்பகுதி விவசாயிகள் முயற்சி செய்தால் இன்னும் அதிகஅளவு வெண்பட்டு கூடு உற்பத்தி செய்யலாம் என்றார்.
வணிக வளாக கட்டிடத்தில் தினசரி மார்க்கெட் செயல்படக் கோரி மனு
வணிக வளாக கட்டிடத்தில் தினசரி மார்க்கெட் செயல்படக் கோரி மனு அவிநாசி, ஜன.29 – அவிநாசி பேரூராட்சியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள வணிக வளாக கட்டிடத்தில் தினசரி மார்க்கெட் செயல்ப டுத்த செவ்வாயன்று கோரிக்கை மனு அளித்துள்ளனர். அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் பேரூராட்சி அதிகாரியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில், அவிநாசியில் காவல்நிலையம் அருகில் சுமார் 16 ஆண்டுகளாக தினசரி மார்கெட் வியாபாரம் சிறப்பாக நடந்துகொண்டு இருந்தது. இந்நிலையில் தினசரி மார்க்கெட்டை சீர்படுத்தி தருவதாக கூறி தற்காலிகமாக காலிசெய்து கொடுக்குமாறு பேரூராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதில் பேரூராட்சியின் ஏற்பாட் டில் புதிய பேருந்து நிலையத்திற்கு மேற்கு பகுதியில் தற்காலிக் மாக தினசரி மார்க்கெட் கடந்த 6 ஆண்டுகளாக வியாபாரம் நடைபெறுகிறது. இந்த 6 ஆண்டுகளில் பல வியாபாரிகள் தங் கள் பொருள், உழைப்பு, சொத்து என பலவற்றை இழந்து விட்டார்கள். மேலும் பெரும் கடன் சுமையிலும் நிற்கின்றனர். ஆகவே 6 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்ட எங்கள் தினசரி மார்க்கெட்டை காவல் நிலையம் அருகிலேயே மீண்டும் செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ள னர்.
மேயரிடம் மலர் தொழிலாளர் சங்கம் மனு
மேயரிடம் மலர் தொழிலாளர் சங்கம் மனு கோவை, ஜன.29- கோவை மாவட்ட தலைமை மலர் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகியி டம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவை மாநகரில் மாநகரட்சிக்கு சொந்தமான பண்னீர் செல்வம் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு மாநகரட்சிக்கு சொந்தமான காலி இடமும் உள்ளது. இந்த மார்க்கெட்டில் சுமார் 150க்கும் மேற்பட்ட பூ மாலைகள் கட்டும் தொழிலாளர்கள், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பூ மாலைகள் கட்டும் வேலை செய்து வருகின்றனர். இது வரை எங்களுக்குகாக எந்த இடமும் இல்லை. ஆகையால் தப்பொழுது மார்கட்டில் எங்களுக்கும் பூ மாலைகள் கட்ட இடம் ஒதுக்கி தர வேண்டும் என்றனர். இந்த மனு அளிக்கையில், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோவை மாவட்ட தலைமை மலர் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். நாராயணன், மாவட்டப் பொருளாளர் ஏ.கே. ஹனிபா, மில் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.ராஜன் மற்றும் மலர் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஈமு கோழி மோசடி - குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
கோவை, ஜன.29- ஈமு கோழி மோசடி வழக்கில் குற்ற வாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண் டனையை டான்பிட் நீதிமன்றம் உத்தர விட்டது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை யைச் சேர்ந்தவர் குருசாமி (40). இவர், கடந்த 2010 ஆம் ஆண்டு பெருந்துறை யில் சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஈமு கோழியை வளர்த்தால் அதன் முட்டை, இறைச்சி போன்றவை அதிக விலை போகும் எனக்கூறி விளம்பரம் செய்த னர். கவர்ச்சிகரமான இரண்டு திட்டங் களை விளம்பரப்படுத்தி முதல் திட்டத் தில், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், 6 ஈமு கோழி குஞ்சுகள், தீவனம், கொட்டகை அமைத்துக் கொடுத்து, பரா மரிப்பு தொகையாக 2 ஆண்டுக ளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம், ஆண்டு போனசாக ரூ.20 ஆயிரம் அளிக்கப்ப டும், இரண்டு ஆண்டுகள் கழித்து கட்டிய முழு பணமும் திருப்பி அளிக்கப்படும் என்று விளம்பரப்படுத்தி னர். இதுபோன்று மற்றொரு திட்டத்தை யும் அறிவித்தனர். இதை நம்பி சுசி நிறுவன அலுவலகத்தின் பொள்ளாச்சி கிளை அலுவலகத்தில் 1087 பேர் முத லீடு செய்து ஏமாந்தனர். இவர்களிடம் இருந்து ரூ.19.03 கோடி செய்ததாக கடந்த 2012 ஆம் ஆண்டு கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் நீதிமன்றமான டான்பிட் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் புதனன்று தீர்ப்பு வழங்கப் பட்டது. அதில், மோசடி செய்த நிறுவனத் தின் மேலாண் இயக்குநர் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மோசடி செய்த தொகையான ரூ.19 கோடியை அபராதமாகவும் விதித்து உத்தரவிட்டது. தமிழகம் முழுவதும் சுசி ஈமு கோழி நிறுவனம் மீது 10 மோசடி வழக்கு உள்ள நிலையில், கோவை டான்பிட் நீதிமன்றத்தில் 6 வழக்குக ளும், மதுரை டான்பிட் நீதிமன்றத்தில் 4 வழக்குகளும் உள்ளது. கோவை நடந்த வழக்குகளில் ஏற்கனவே 3 வழக்குக ளில் தீர்ப்பு கூறப்பட்டுள்ள நிலையில், புதனன்று 4 வதாக பதியப்பட்ட வழக் கிற்கும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
சரக்கு ரயில் மூலம் ஜேசிபி இயந்திரம் அனுப்பி வைப்பு
சரக்கு ரயில் மூலம் ஜேசிபி இயந்திரம் அனுப்பி வைப்பு சேலம், ஜன.29- சேலம் ரயில்வே கோட்டத்தின் புதிய முயற்சியாக, சரக்கு ரயில் மூலம் ஜேசிபி இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. சேலம் ரயில்வே கோட்டத்துக்கு சரக்கு போக்குவரத்து மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்க பல்வேறு முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற் போது புதிய முயற்சியாக ஃபுல் மிஷின் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, கோவை மாவட்டம், இருகூரி லிருந்து பள்ளப்காருக்கு ஃபுல் பேக்கேஜ் லோடர் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு செல்லும் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, செவ்வாயன்று இரு கூரிலிருந்து முதல் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு செல் லும் சரக்கு ரயிலை சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா துவங்கி வைத்தார். இதில் ஒரு ரேக்கிற்கு 37.11 லட்சம் ரூபாய் வருவாய் சேலம் கோட்டத்திற்கு கிடைத்துள் ளது. இந்த வருவாயை மேலும் அதிகரிக்க மாதத்துக்கு இரண்டு முறை ஜேசிபி இயந்திரங்களை சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாக, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.