வேலூர்.ஜனவரி.30- பெண் மருத்துவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2022 ஆண்டு வேலூரில் பெண் மருத்துவர் கடத்தப்பட்டுக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் குற்றவாளி நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைத் தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.