districts

img

பொது வழித்தடத்தை மறித்து சுவர்: சிஐடியு புகார்

கோவை, ஜன.29- சிஐடியு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் தொழிலாளர் சங்கத்திற்கு  சொந்தமான இடத்திற்கு செல்லும் வழித் தடத்தின் குறுக்கே தனிநபர் ஒருவர் காம்பவுண்ட் சுவர் அமைத்துள்ளார். இதனை அகற்ற வேண்டும் என கோவை மாநகராட்சியிடம் சிஐடியு புகார் தெரி வித்துள்ளது. கோவை மாநகராட்சி ஆணையரி டம், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, குடிநீர் வடி கால் வாரியத் தொழிலாளர் சங்க மாவட் டத் தலைவர் ஏ.பிரான்சிஸ், பொதுச் செயலாளர் ஆர்.சரவணன், பொருளா ளர் எம்.சசிகுமார் ஆகியோர் செவ்வா யன்று புகார் ஒன்றை அளித்தனர். அதில் கோவை மாவட்டம், கணபதி அடுத்த விளாங்குறிச்சியில் 640 சதுர அடி கொண்ட காலியிடத்தை 2024 ஆம்  ஆண்டு சிஐடியு சங்கம் வாங்கியுள்ளது. இந்த இடத்திற்கு செல்லும் வழித்தட மான ஸ்ரீ ராகவேந்திரா அவென்யூ லேஅவுட் சாலை அருகில் வசிக்கும் பிளாட் எண் 10 இல் வசிக்கும் தனிநபர் ஒருவர் ரெடிமேட் காம்பவுண்ட் சுவர் அமைத்து மறித்துள்ளார்‌. இதனால், புதிதாக கட்டப்பட உள்ள சங்க கட்டி டத்திற்கு பொருட்கள் கொண்டு செல்வ திலும், பணியாளர்கள் செல்வதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மாநக ராட்சிக்கு சொந்தமான பொது வழித் தடத்தை தனிநபர் மறித்துள்ளதால், உட னடியாக தலையிட்டு, வழித்தடத்தை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி யுள்ளனர்.