காஞ்சிபுரம்,ஜனவரி.30- பாலியல் புகாரில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொல்லை கொடுத்த பொன்னம்பலத்தைப் பெண்கள் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.