districts

img

சாலையில் உலாவிய யானைக்கூட்டம்

கோவை, ஜன.29- மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் யானை கூட்டம் குட்டிகளு டன் முகாமிட்டுள்ளதால், மலைச்  சாலையில் வாகனங்களை இயக்குப வர்கள் பாதுகாப்பாக இயக்க வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகு தியில் ஏராளமான வனவிலங்குகள் உள் ளன. இந்த வனவிலங்குகள் அவ்வப் போது வனத்தை விட்டு சாலைகளுக்கு வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த இரு தினங்களாக மேட்டுப்பாளையம் -  கோத்தகிரி சாலையில் குட்டிகளுடன்  யானைக்கூட்டம் உணவு தேடி சாலையை கடந்து சென்றது. இதனை அவ்வழியாக சென்ற சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். தற் போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து வனத்துறையி னர் கூறுகையில், மலை சாலையில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகள வில் இருந்து வருகிறது. சாலை வழியே  பயணிக்கும் வாகன ஓட்டிகள் மெதுவா கவும் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பு டன் பயணிக்க வேண்டும். சாலையில்  வனவிலங்குகளை கண்டால் வனத் துறையினருக்கு உடனடியாக தகவல்  தெரிவிக்க வேண்டும். தனியாகவோ  கூட்டாகவோ சேர்ந்து வனவிலங்கு களை விரட்டக்கூடாது, என்றனர்.