tamilnadu

img

ராணுவத்தில் அதிகாரியாக விருப்பமா?

ராணுவத்தில் அதிகாரியாக விருப்பமா?

இந்தியத் தரைப்படையில் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் இல்லாத துறைகளில் பணிபுரிவதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. அனைத்துப் பொறியியல் பிரிவுகளிலும் கல்வித் தகுதி உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் திருமணம் ஆகாதவர் களாக இருக்க வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலினத்தவர்களும் விண்ணப் பிக்கலாம். Short Service Commission என்று சொல்லக் கூடிய குறுகிய காலப் பணிகளுக்கான 379 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. தொழில்நுட்பப் பிரிவு அல்லாத பணியிடங்களுக்கு கலை மற்றும் அறிவியல் பாடங்களைப் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இதில் கூடுதல் நிபந்தனை என்னவென்றால், தற்போது நிரப்பப்படும் இந்தத்  தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்கள் அனைத் தும் போரில் மரணமடைந்த ராணுவ வீரர்களின்  விதவைத் துணைவிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. பொறியியல் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் அழைக்கப்படுவார்கள். முதல் கட்டமாக உளவியல் தேர்வு, குழுத்தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில்(OTA) 49  வாரம் பயிற்சி பெற அனுப்பப்படுவார்கள். இந்தப்  பயிற்சி அக்டோபர் 2025ல் தொடங்கும். அதன் பின்னர் PG Diploma in Defence Management and Strategic Studiesக்கான வகுப்புகளில் சேர்க்கப் படுவர். இந்தப் பயிற்சிக்குப் பிறகு தரைப்படை யில் லெப்டினென்ட் (Lietenant) ஆக பணிய மர்த்தப்படுவார்கள். கூடுதல் விபரங்கள் மற்றும் விண்ணப்பத்தை நிரப்ப www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்ப தற்கான கடைசித்தேதி பிப்.05, 2025 ஆகும்.

சட்டக்கல்லூரிப் பேராசிரியர் பணி

தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரி களில் உள்ள இணை பேராசிரி யர்கள் மற்றும் துணைப் பேராசிரி யர்கள் பணியிடங் களை நிரப்புவதற் கான அறிவிக்கை (அறிவிக்கை  எண் . 01/2025) வந்துள்ளது.  ஜனவரி 24, 2025 அன்று அறி விக்கை வெளியாகியுள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பு ஒன்றையும் தமிழ்நாடு ஆசிரியர்  தேர்வு வாரியம் வெளியிட்டிருக் கிறது. அதன்படி, மாநிலத்தில்  உள்ள அரசு சட்டக்கல்லூரி களில் உள்ள 132 இணை பேரா சிரியர்கள் மற்றும் துணைப்  பேராசிரியர்கள் பணியிடங்களை  நிரப்பப் போகிறார்கள். போட்டித் தேர்வு மூலமாக இந்தத் தேர்வு மேற்கொள்ளப்படும்.  விண்ணப்பங்களை ஜனவரி 31, 2025 ஆம் தேதி முதல் நிரப்ப லாம். விண்ணப்பங்களை நிரப்பு வதற்கான கடைசித் தேதி மார்ச்  3, 2025 ஆகும். தேர்வு நடப்பதற் கான உத்தேசத் தேதியாக மே 11, 2025 அறிவிக்கப்பட்டிருக்கிறது.  ஒவ்வொரு பணியிடத் திற்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள், தேர்வு முறை மற்றும் பாடத்திட்டங்கள் உள்ளன. தமிழ் தகுதித்தேர்வு அனைத்துப் பணியிடங்களுக்கும் கட்டாய மான ஒன்றாகும். இதில் 40 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற வேண்டும். இவற்றை யும், மேலும் கூடுதல் விபரங்க ளையும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளமான www.trb.tn.gov.in இல் பார்வையிடலாம்.

புள்ளி விபரம்

முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைப் பொருளாதாரங்களான வேளாண்மை மற்றும் தொழில்துறையில் வேலைவாய்ப்புகள் சரிவு ஏற்பட்டு வரும் நிலையில், சேவைத்துறையில் “ஒயிட் காலர்” பணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நோக்ரி(naukri) என்ற நிறுவனம் தனது ஆய்வில் கிடைத்த தகவல்களைப் பகிர்ந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்ததாகவும், இந்த அதிகரிப்பு பெருநகரங்களில் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையிலும், கோவையிலும் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

மேலாண்மைப் பணிகள்

தூத்துக்குடியில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் மேலாண்மைத்துறை(நிதி)யில் 5 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. விபரங்களை www.ipa.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பெறலாம். விண்ணப்பிக்கக் கடைசித்தேதி பிப்ரவரி 10, 2025 ஆகும்.