tamilnadu

img

காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை : சத்துணவு ஊழியர்கள் உண்ணாநிலை

சென்னை, ஜன. 29 – பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தை தனியாரி டம் தாரை வார்க்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தி னர், 24 மணி நேர உண்ணாநிலைப் போராட்டத்தை புதனன்று (ஜன.29) சென்னை சேப்பாக்க வளாகத்தில் துவங்கினர். காலை சத்துணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; போர்க்கால அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப  வேண்டும்; தொகுப்பூதிய பணி நிய மனத்திற்கான அரசாணை 95-ஐ ரத்து செய்ய வேண்டும்; ஓய்வூதியமாக 9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது ஒட்டுமொத்தமாக 5  லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டத்தை துவக்கினர். சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.கலா தலைமையிலான உண்ணா நிலைப் போராட்டத்தை தமிழ்நாடு அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க பொதுச்செயலாளர் பி. ராமமூர்த்தி துவக்கி வைத்து பேசினார். வரு வாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் இ. மணிகண்டன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் கு. சுதா, தலைமைச் செயலக ஊழியர்  சங்க மாநிலத் தலைவர் ஜி. வெங்க டேசன்  உள்ளிட்ட பலர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செய லாளர் ஆ. ஜெஸி மற்றும் மாநில,  மாவட்டத் தலைவர்கள் உண்ணா நிலைப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக போராட்டம் குறித்து, சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ. மலர்விழி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அதில், “மாநிலம் முழுமைக்கும் சத்துணவுத் திட்டத்தில் 63 ஆயி ரத்திற்கு மேற்பட்ட பணியிடங்கள் காலி யாக உள்ளன. இதனால், பணிப்பளு அதிகரித்துள்ள நிலையில், காலிப் பணியிடங்கள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். அதேநேரம் தமிழ்நாடு முழு வதும் 1,887 சமையல் உதவியாளர் களை கல்வித் தகுதி அடிப்படையில் நிரப்புவதாக அறிவித்துள்ள அர சாணை 95-ஐ தமிழ்நாடு அரசும் துறை யின் அமைச்சரும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். விலை வாசி உயர்வுக் கேற்ப ஒரு குழந்தைக்கான உணவு மானியத்தை 5 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.  மூன்றாண்டாகியும் தங்களின் கோரிக்கையை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை என்பதாலேயே, உண்ணாநிலைப் போராட்டத்தைத் துவங்கியிருப்பதாகவும் அவர் தெரி வித்தார்.  இந்த போராட்டத்தை அடுத்து, சங்கத் தலைவர்களை அரசு அதிகாரி கள் பேச்சுவார்த்தைக்கு அழைத் துள்ளனர்.