சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சு.வெங்கடேசன் எம்.பி எக்ஸ் பதிவு:
எங்களின் நம்பிக்கை நொறுங்கிப் போனது. துயரம் தாள முடியவில்லை.
ஆர்.சச்சிதானந்தம் எம்.பி எக்ஸ் பதிவு:
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராய் நெருக்கடி நிலைக் காலத்தில் அடக்குமுறையை எதிர்க்கொண்டவராய், இந்தியாவின் மதச்சார்பின்மையையும், அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாப்பதில் முன்கள வீரராய், சிறந்த நாடாளுமன்றவாதியாய் திகழ்ந்து, 2015 முதல் சிபிஐ(எம்) பொதுச்செயலாளராக மிகச் சிறந்த பங்களிப்பை ஆற்றிய தோழர்.சீத்தாராம் யெச்சூரி அவர்களுக்கு செவ்வணக்கம்..!