tamilnadu

img

தற்காப்பின் அடையாளம் காஞ்சிப்பூ - ப.முருகன்

கதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்றார் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால் இப்போதும் கூட ஆக்  கிரமிப்புப் போர்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதை அமெரிக்கா போன்ற வல்  லாதிக்க நாடுகள் தூண்டி விட்  டும் அதற்குஉதவி செய்தும்  பயனடைந்து கொண்டிருக்கின் றன. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தும் இன ஒழிப்புப் போர் இதற்கு ஓர் உதாரணம். அதை  தவறு என்று உலகமே சொன்னா லும் - ஐ.நா சபையே கூறினாலும் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒத் துக் கொள்வதில்லை. வல்லான் வகுத்தது வாய்க்கால் என்பது பழ மொழி. இது போல்சங்க காலத்தில் இனக்குழுத் தலைவனை பேரர சர்கள் சேர்ந்து தாக்கி அழித்தது தமிழக வரலாற்றிலும் நடந்தி ருக்கிறது. பரம்பு மலை பாரியை சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்கள் தாக்கி அழித்த கதை அதுதான்.அப்போது மூவேந்தர்களை எதிர்த்து பாரி நடத்தியது தற் காப்புப் போர். அப்போதைய போர் இலக்க ணப்படி மூவேந்தர்கள் வஞ்சிப்  பூவைச் சூடித் தாக்கியிருப்பார் கள். பாரி காஞ்சிப் பூவைச் சூடி எதிர்த்திருப்பான்.

இது காஞ்சித் திணை என குறிப்  பிடப்படுகிறது. வெட்சி நிரை கவர்தல், மீட்டல்  கரந்தையாம், வட்கார் மேல் செல்  வது வஞ்சி, உட்காது எதிரூன்றல் காஞ்சி - என்கிறது புறப்பொருள் வெண்பா மாலை. தன் நாட்டின் மீது படை யெடுத்து வருபவர்களை தடுத்து  நின்று தாக்குவது தான் காஞ் சித்திணை. இந்தப் படையினர் தங்கள் தலையில் காஞ்சிப் பூவைச் சூடியிருப்பார்கள். அத னால் தான் இது காஞ்சித் திணை  என்ற பெயர் பெறுகிறது. இந்த காஞ்சிப்பூ மரத்தில் பூப்  பதாகும். காஞ்சி மரங்கள் நிறைந்த  பகுதியை காஞ்சி வனம் என்ற ழைப்பர். காஞ்சிபுரம் என்பது  அப்படி வந்ததுதான். தமிழ்நாட் டில் மனிதர்களுக்கு இப்போதும் கூட காஞ்சிவனம் என்ற பெயர் வைக்கப்படுவதைப்பார்க்கலாம். காஞ்சித் தலைவன் என்று நர சிம்ம பல்லவன் அழைக்கப்பட்ட தும் அப்படித் தான்.

இந்த காஞ்சித்திணையை தொல்காப்பியர் நிலையாமை யைக் குறிக்கப்பயன்படுத்து கிறார். இரங்கல்பா, இறந்தவர் களோடு தானும் இறத்தல் உள் ளிட்ட நிகழ்வுகளை கூறுவதாகும். புலவர் பிசிராந்தையாரின் பாடல் அதற்கு எடுத்துக் காட்டு.அது போன்ற பல பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன.  மல்லோட்டஸ் பாலிகார்பஸ் (mallotus polycarpus) என்பது இதன் தாவரவியல் பெயர். இது யூபோர்பியேசி (Euphorbiaceae) எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். வெள்ளைத் தேக்கு (Trewia nudiflora) என் றும் கூறப்படுகிறது. இந்த காஞ்சி மரம் மணல் பாங்  கான ஆற்றங்கரைப் பகுதியில் வளர்வதாகும். ஆற்றோர ஊர்கள்  வெள்ளத்தால் பாதிக்கப்படுவதி லிருந்து காப்பாற்றும் மரங்க ளாய் காஞ்சி மரங்கள் இருந்தன என்று மலைபடுகடாம் (449) கூறு கிறது. இதை செம்மருது என்றும் குறிப்பிடுகிறார்கள். காஞ்சிப் பூ  மஞ்சரி வகைப் பூவாகும். மொட் டாக இருக்கும் போதைவிட பூத்த  பிறகே மிக அழகாக காட்சிய ளிக்கும். மல்லிகைச்சரம் மலர்ந்தி ருப்பது போலிருக்கும். காஞ்சி  மர இலைகளை ஆடு, மாடுகள்  உண்ணும் என்கிறது கலித் தொகை (34 - 8) பாடல். இந்த காஞ்சித்திணை அஞ்சா மையின் அடையாளமாய்த் திகழ்  கிறது.