tamilnadu

img

கல்வெட்டு எழுத்துக்களை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்

‘தமிழி’ எனப்படும் பிராமி எழுத்துக்களை சரளமாக வாசித்து அசத்தும் பள்ளிக் குழந்தைகள்...

கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டிருக்கும் பழமையான  ‘தமிழி’ எனப்படும் பிராமி எழுத்துக்களை  கோவையை சேர்ந்த தமிழ் ஆசிரியர் ஒருவர்  மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறார்.

கோவை காளப்பட்டி நேரு நகர் பகுதி யில் உள்ள எஸ்.எஸ்.பி என்ற தனியார் பள்ளி யில் பணியாற்றி வருபவர் தமிழாசிரியை கவிதா. இவர் தொடங்கிய சிறிய முயற்சி யின் விளைவாக இன்று தமிழி, பள்ளி மாண வர்களிடம் எளிதாகப் பரவியுள்ளது. தமிழ் எழுத்துக்களின் முந்தைய வடிவமான தமிழி  எழுத்துக்களை கற்றுத் தேர்ந்த இவர் கடந்த  2 வருடங்களாக, தனது மாணவர்களுக்கும் தமிழி எழுத்துக்களை கற்றுக் கொடுத்து வரு கிறார். எளிய மொழிநடையில் தமிழில் எழுத்துக்களை கற்றுக் கொடுப்பதால் குழந்தைகளும் ஆர்வத்துடன் தமிழி எழுத்துக்களை பயின்று வருவதாக கூறுகிறார் ஆசிரியை கவிதா. இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழை முதன்மை மொழி யாக தேர்வு செய்து பயின்று வரும் மாணவ  மாணவிகளுக்கு தனியாக இந்த பயிற்சி யினை வழங்கி வரும் ஆசிரியை கவிதா இது  குறித்து நம்மிடம் கூறுகையில், நான் இந்த  பள்ளியில் 25 ஆண்டுகளாகத் தமிழ் ஆசிரிய ராகப் பணிபுரிந்து வருகிறேன். சிறுவயது முதலே தமிழ் மொழி மீது இருந்த ஆர்வம்  காரணமாக தமிழி எழுத்துக்களை கற்றுக்  கொண்டேன். கல்வெட்டுகளில் உள்ள தமிழ்  மொழியின் ஆதி எழுத்து வடிவம்தான் தமிழி  எனப்படுகிறது. தமிழியை கற்றுக் கொண்ட தால், தொன்மையான கல்வெட்டுகளையும் படிக்க முடிகிறது. இதை இளைய தலை முறை மாணவர்கள் கற்றுக் கொண்டால் தமிழின் தொன்மையையும், தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை கல்வெட்டுகள் மூலம் அனைவரும் அறிந்து  கொள்ள முடியும் என்பதற்காக இதனை  ஒரு இயக்கமாக முன்னெடுக்க எண்ணி னேன். அதன்படி முதற்கட்டமாக நான் பணி யாற்றி வரும் பள்ளியில் கடந்த 2 ஆண்டு களாக மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து  வருகிறேன். தமிழி என்றால் என்ன? என்பது குறித்து  பலருக்கு சந்தேகம் எழலாம். பல ஆயிரம்  ஆண்டுகள் பழமையான தமிழின் முந்தைய  வடிவமே தமிழி எனப்படுகிறது. இந்த மொழி யில்தான் கல்வெட்டுகள், கோயில்கள் உள்  ளிட்டவற்றில் பண்டைய தமிழர்கள் எழுதி யுள்ளனர். இதனை பள்ளி மாணவர் களுக்கு கற்றுத்த தர வேண்டும் என்று பள்ளி யின் தாளாளர் முத்துச்சாமியிடம் கேட்ட போது, அவர் தமிழி எழுத்துக்களை மாண வர்களுக்கு கற்றுத்தர அனுமதி அளித்த துடன் தற்போது வரை உறுதுணையாகவும் இருந்து வருகிறார். தமிழ் மொழியுடன் சேர்ந்து அதன் முந்தைய வடிவமான தமிழி எழுத்துக்களையும் கற்று கொடுக்கும் போது மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்கின்றனர். 

முதலில் தமிழி எழுத்துக்கள் மூலம் குழந்தைகளை தங்களது பெற்றோர் பெயர்களை எழுத வைத்தோம். ஆரம்பக் கல்வி கற்கும் போது மாணவர்களிடம் இது போன்ற நல்ல விஷயங்களை கற்றுக்  கொடுத்தால் அது அவர்களுக்கு எதிர்காலத்  தில் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்  மொழி குறித்த உணர்வையும் ஆர்வத்தை யும் மாணவர்கள் மத்தியில் அதிகளவு  கொண்டு செல்ல இது உதவுகிறது. தமிழ் நாடு அரசும் பல்வேறு முன்னெடுப்புகளின் மூலம் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த நிலையில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி களிலும் தமிழோடு இணைந்து தமிழி எழுத்துக்களையும் கற்று கொடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். தமிழி எழுத்  துக்கள் அடுத்த தலைமுறையிடம் கொண்டு  சேர்ப்பதன் மூலம் வரலாற்று கற்றல்  ஆர்வம் மாணவர்களிடையே அதிகரிக்கும்.  தமிழகத்தை பொறுத்தவரை கீழடி அக ழாய்விலும் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. முறையான எளிமையான பயிற்சி எடுத்துக்  கொண்டால், இரு வாரங்களில் தமிழியை கற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார். ஆசிரியை கவிதாவிடம் தமிழி எழுத்துக்களை கற்று வரும் பள்ளி மாணவி கள் கூறும்போது, நமது முன்னோர்களின் எழுத்து வடிவத்தை கற்றுக் கொள்வது பெருமையாக உள்ளது. தமிழி எழுத்து வடிவம் தமிழிலிருந்து வேறுபட்டு சற்று  வித்தியாசமாக உள்ளது. இருந்தாலும் இதனை கற்றுக்கொள்வது எங்களுக்கு மிக வும் பிடித்துள்ளது. தமிழி எழுத்துக்களை மிக எளிமையாக எங்கள் ஆசிரியர் கற்றுக் கொடுக்கிறார், அதனை ஆர்வமுடன் கற்று  வருகிறோம். தற்போது தமிழி எழுத்துக் களை எங்களால் படிக்கவும், எழுத முடி யும். அதற்கான பொருளையும் கூற முடி யும் என உற்சாகம் பொங்கத் தெரிவிக் கின்றனர்.

- கோவை கார்த்திக்