districts

சென்னை முக்கிய செய்திகள்

கோல்டன் ஹோம்ஸ் திருச்சி மதுரை, கோவைக்கு விரிவாக்கம் 

சென்னை, டிச.21 சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனமான கோல்டன் ஹோம்ஸ், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.  இந்நிறுவனம் சென்னையில் மட்டும் சுமார் 150 திட்டங்களைச் செய்துள்ளதாக அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பால்சிங் ஜார்ஜ் தெரிவித்தார். நிறுவனத்தில் அடுத்த தலைமுறை நிர்வாகப்பொறுப்பை ஏற்க உள்ள நிலையில்  புதிய வளர்ச்சிக் கட்டத்தோடு தனது வணிகத்தை விரிவுபடுத்த தயாராக உள்ளது என்றும் அவர்கூறினார்.  கடந்த பல ஆண்டுகளாக முகப்பேர் திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தரமான நிலைத்து நிற்கக்கூடிய வீடுகளை வழங்கியுள்ளதாகவும் இதனால் வாடிக்கையாளர்கள் திருப்தியுடன் இருப்பதாகவும் அவர் கூறினார். வாழ்வதற்கான வீடுகளை உருவாக்குவது மட்டும் எங்களது குறிக்கோள் அல்ல அழகான நீடித்து நிற்கக்கூடிய வீடுகளையும் உருவாக்குவதே முக்கிய இலக்கு என்று அவர் தெரிவித்தார்.  முதியோர்களுக்கு ஏற்ற வீடுகளைக் கட்டுவதையும், இயற்கைக்கு உகந்த வீடுகளை கட்டுவதையும் கார்பன் தடயத்தை கணிசமாகக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக நிறுவனத்தின் இயக்குநரான ஜோயல் ஜார்ஜ் கூறினார். கோல்டன் ஹோம்ஸ் சென்னையில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திட்டங்களை முடித்துள்ளது.

ஆற்றில் மூழ்கிய மாணவனை மீட்பதில்  தாமதம்  உறவினர்கள் சாலை மறியல் 

கடலூர், டிச.21-  பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில்  குளித்த கல்லூரி மாணவர் வெள்ளிக்கிழமை மாலை நீரில் மூழ்கி மாயமான நிலையில் சனிக்கிழமை மாலை வரை இரண்டாவது நாள் தேடப்பட்டும் மாணவரின் உடலை கண்டு பிடிக்காததால் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சின்ன அக்கடவல்லி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சங்கர் (வயது 20) இவர் கடலூர் அரசு கலைக் கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 4 நண்பர்களுடன் சங்கர் சின்ன கள்ளிப்பட்டு பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் உள்ள தடுப்பணை அருகில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி மாயமானார்.  இதனை அடுத்து தகவலின் பேரில் புதுப்பேட்டை போலீசார் மற்றும் பண்ருட்டி தீயணைப்பு வீரர்கள் கடலூர் பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கள் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், மாணவன் உடலை இரண்டாவது நாளாகியும் இதுவரை கண்டுபிடித்து கொடுக்கவில்லை என்று பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பண்ருட்டி சென்னை சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் மாணவியின் உடலை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

பேருந்து மேற்கூரை மீது மின்சாரம்  பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு

ராணிப்பேட்டை, டிச. 21 –  ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த முப்பது வெட்டி பகுதியில் சனியன்று (டிச. 21) மேல்மருவத்தூர் கோவிலுக்கு பக்தர்கள் ஏற்றிச் சென்ற பேருந்து மேற்கூரை மீது தாழ்வான  மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்ததில் இளம் பெண் உயிரிழந்தார். வாணியம்பாடியில் இருந்து-  மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து இடையில் டீ அருந்துவதற்காக நிறுத்திய போது பேருந்தின் மேல் கூரை  தாழ்வாக சென்ற மின்கம்பி மீது  உரசி  மின்சாரம் பாய்ந்ததில் அகல்யா(20) என்ற இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வடசென்னைக்கென்று ஒருங்கிணைக்கப்பட்ட  சுற்றுச்சூழல் கொள்கையை உருவாக்குக  கருத்து கேட்பில் குடியிருப்போர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

சென்னை, டிச. 21- வடசென்னைக்கென்று ஒருங்கி ணைக்கப்பட்ட சுற்றுச்சூழல் கொள் கையை உருவாக்க வேண்டும் என்று எண்ணூர் அனல் மின் நிலைய விரி வாக்க கருத்து கேட்பு கூட்டத்தில் வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங் களின் கூட்டமைப்பு வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரி யம் சார்பில் எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்க கருத்து கேட்பு கூட்டம் திருவொற்றியூர் எர்ணாவூரில் வெள்ளியன்று (டிச. 20) நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைவர் டி.கே.சண்முகம் அளித்த மனுவில், வட சென்னை பகுதியில் எண்ணூர், திரு வொற்றியூர், மணலி பகுதிகளில் காற்றும், நிலமும், நிலத்தடி நீரும், நீர் நிலைகளும் பெரிய அளவு மாசு படுத்தப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியம் சிதைக்கப்பட்டு, உயி ருக்கு ஆபத்தை உருவாக்கும் சூழல் இந்தப் பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. பல்வேறு நோய்களின் உற்பத்தி கூடங்க ளாக இப்பகுதி மாற்றப்பட்டுள்ளது. ஆஸ்துமா, மூச்சுத் திணறல், மூக்கு, தொண்டை வறட்சி, சைனஸ், நுரை யீரல் பாதிப்பு உள்ளிட்ட சுவாசக் கோளா றுகளை உருவாக்குகின்ற சல்ஃபர் டை  ஆக்சைடு, உலகிலேயே மிக மோச மான ஆறு நஞ்சுகளில் ஒன்று என ஐ.நா. சபையால் பட்டியலிடப்பட்டுள்ள மெர்குரி, ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கும் அம்மோனியா ஆகிய நச்சு வாயுக்களை இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் வெளி யேற்றி உடலுக்கும், உயிருக்கும் ஆபத்தை உருவாக்கிக் கொண்டிருக் கின்றன. சாம்பல் கழிவுகள் அனைத்து விதிகளையும் மீறி நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அனல் மின் நிலையத்திலிருந்து சாம்பல் கழிவுகள் ஆற்றில் கொட்டப்படு கின்றன. சாம்பல் குழாய்களில் அடிக் ்கடி கசிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை உருவாக்குகிறது. இத்தகைய கழிவுகள் ஆற்றை பாழ்படுத்தி மீன்வளம், கடல் வாழ் உயிரினங்கள் உற்பத்தி என அனைத்தையும் அழிக் கின்றன. இதனை நம்பி வாழும் மீன வர்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கின்றன. தொழிற்சாலைகள் வரு வதற்கு முன்பு 25 வகையான மீன்களைப்  பிடித்த நிலையில், இன்று அடியோடு மாறி, ஐந்து வகையான மீன்களுக்கே மீனவ மக்கள் திண்டாடுகின்றனர். இந்த மக்களின் வேலைவாய்ப்பு கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலை களுக்கு இப்பகுதிகளில் குவிந்திருக் கிற ரசாயனம், உரம், பெட்ரோலியம், ரப்பர், காஸ்டிக் சோடா தயாரிக்கக் கூடிய தொழிற்சாலைகளும், அனல்  மின் நிலையங்களும் தான் காரண மாகும். தமிழ்நாடு முழுவதும் உள்ள  10 பெட்ரோ கெமிக்கல் தொழிற் சாலைகளில் 9 தொழிற்சாலைகள் இந்தப் பகுதிகளில்தான் உள்ளன. அதே போல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொடர்புள்ள தொழிற்சாலைகள் 6இல் 5-ம், உரம் தயாரிக்கும் தொழிற்சாலை கள் 7இல் 3-ம், அனல் மின் நிலை யங்கள் 4இல் 2-ம் இந்தப் பகுதிகளில் உள்ளன என்பதிலிருந்தே இதன் அபா யத்தை புரிந்து கொள்ள முடியும். இத்தகைய தொழிற்சாலைகளை மிக ஆபத்தானவையாக (Red Industry) மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் வகைப் படுத்தியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில்தான் தமிழ்நாடு அரசு முயற்சிக்கும் எண்ணூர் அனல் மின் நிலைய (ETPS) விரிவாக்க திட்டத்தை மக்கள் கவலையோடும், அச்சத்தோடும், உயிர் பயத்தோடும் பார்க்கின்றனர். இதுநாள் வரை சூழல் பாதுகாப்பு குறித்து தொழிற்சாலைகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனை த்தும் மக்களின் அச்சத்தை போக்கக் கூடியதாக அமையவில்லை. மேலும் எல்லா சமயங்களிலும் ஒரு பாதுகாப் பற்ற சூழல் நிலவுவதாகவே மக்கள் உணர்கின்றனர். தொழிற்சாலைகளை கண்காணித்து, கட்டுப்படுத்த வேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு வாரி யத்தின் நடவடிக்கைகள் மீது ஒருவித நம்பகமற்ற தன்மைதான் மக்களிடம் உள்ளது. எனவே தமிழ்நாடு அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் முதலில் மக்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தி, பாதுகாப்பான சூழலை உருவாக்கி, வாழ்வாதாரத்திற்கு வாய்ப்பை உருவாக்கிய பிறகு இத்த கைய விரிவாக்க திட்டத்தை பற்றி விவா திப்பதே பொருத்தமாக இருக்கும் என எமது கூட்டமைப்பு கருதுகிறது. அதே நேரத்தில் தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சு வாயுக்கள் மற்றும் கழிவுகள் தொடர்பான சுற்றுச்சூழல், திடக்கழிவுகளை திறமையாக கையா ளும் சுற்றுச்சூழல், நீர்நிலைகள், நீர்வழி கள் தொடர்பான சுற்றுச்சூழல், வாக னங்கள் வெளித்தள்ளும் புகை தொடர் பான சுற்றுச்சூழல், சுத்தமான காற்று, தரமான குடிநீர் என ஒரு ஒருங்கி ணைக்கப்பட்ட சுற்றுச்சூழல் கொள்கை அவசியமானது என்று எமது கூட்ட மைப்பு கருதுகிறது. இத்தகைய பெரும் ஆபத்திலிருந்து வடசென்னை மீள வேண்டும் என்றால் வடசென்னைக் கென்று ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுச் சூழல் கொள்கையை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் என்று அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உறுப்பினர் செய லாளருக்கும், மதிப்பீட்டு குழு (அனல் மின் திட்டங்கள்), சுற்றுச்சூழல், வனங்கள்  மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சக உறுப்பினர் செய லாளர் ஆர்.சுந்தருக்கும், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜக டேவுக்கும் மனு அளித்துள்ளதாக டி.கே. சண்முகம் கூறினார்.