districts

img

அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகே சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சட்டமேதை அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி சனிக்கிழமையன்று (டிச.21) அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பன்னீர்செல்வம் நகர் கிளைச் செயலாளர் பி.வேல்மணி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஆனந்தகுமார், சைதாப்பேட்டை பகுதிக்குழு உறுப்பினர்கள் ஒய்.இஸ்மாயில், பக்கிரி, தமுஎகச தலைவர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.