districts

திருச்சி முக்கிய செய்திகள்

தமுஎகச-வின் வாசிப்பு வட்டம்

கும்பகோணம், மார்ச் 9- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து கும்ப கோணத்தில் முதல் வாசிப்பு வட்ட கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில், “இந்திய சுதந்திரப் போரும் கப்பற்படை எழுச்சியும்” என்ற புத்தகம் பற்றிய தங்கள் வாசிப்பு அனுப வங்களை வாசகர்கள் பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு தமுஎகச கும்பகோணம் நகரக் குழு உறுப்பினர் சொ. சண்முகம் தலைமை வகித்தார். தமுஎகச தஞ்சை மாவட்டத் தலைவர் சா.ஜீவபாரதி முன்னிலை வகித்தார்.  நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமுஎகச தஞ்சை மாவட்டச் செயலாளர் இரா.விஜயகுமார் கலந்து கொண்டார். வாசிப்பு வட்டத்தின் கமிட்டி பொறுப்பாளர்களாக சொ.சண்முகம், இரா.கண்ணதாசன் மற்றும் மா.சுதா ஆகியோர் செயல்படுவது எனவும், நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பாளராக கும்பகோணம் பாரதி புத்தகலய பொறுப்பாளர் ராஜகோபாலன் செயல்படுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.  அடுத்த வாசிப்பு வட்ட கூட்டத்தை நிகழ்வு ஏப்.12 அன்று,  “இயற்கை 24x7” என்ற தலைப்பில் நடத்த முடிவு செய்யப் பட்டது.

வேளாண் மாணவர்களுக்கு பயிற்சி

தஞ்சாவூர், மார்ச் 9-  தஞ்சாவூர் ஆர்.வி.எஸ். வேளாண்மைக் கல்லூரி மாண வர்கள், கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் (RAWE) கீழ், பட்டுக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கிராம வளர்ச்சி முகமை அலுவலகத்திற்குச் சென்று,  கிராம வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய தகவல்களைப் பெற்ற னர். இந்த சந்திப்பின் போது, வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் எஸ்.வீரமணி, எஸ்.ஜான் கென்னடி, துணை வட்டார  வளர்ச்சி அலுவலர்கள் நிர்மல சகாயராஜ், ரெங்கராஜன்,  நித்யா ஆகியோருடன் மாணவர்கள் கலந்துரையாடினர். அவர்கள், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடு பற்றிய முழுமையான விளக்கங் களை வழங்கினர்.

விதவை பெண்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மயிலாடுதுறை, மார்ச் 9 - உலக மகளிர் தினத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் விதவை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திலகம் விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா புனித தெரசாள் கன்னி யர் இல்ல கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அருட்தந்தை சிரில் மற்றும் அருட்தந்தை ரிச்சர்ட் ஆகி யோர் தலைமை வகித்தனர். அருட்சகோதரி ஜான்சி வரவேற்றார். புனித தெரசாள் கன்னியர் இல்லத்தலைவி மெர்சி  தங்கம், திருக்கடையூர் புனிதா, ஆக்கூர் கமலா ரீகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  விழாவில்  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தேசிய மக்கள் நீதிமன்றம் தஞ்சாவூரில் 5,543 வழக்குகளுக்கு தீர்வு

தஞ்சாவூர், மார்ச் 9 - தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 5,543 வழக்குகளில் ரூ.19.39 கோடி அளவுக்கு தீர்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண்பதற்காக தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடை பெற்றது.  இந்நிகழ்வுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி யும், மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான கே.பூரண ஜெய ஆனந்த் தலைமை வகித்தார். முதலாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்கு களுக்கும், இரண்டாவது அமர்வில் குடும்ப  நல வழக்குகளுக்கும், மூன்றாவது அமர்வில் உரிமையியல் மற்றும் குற்றவியல்  வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது. இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, திருவிடைமருதூர், திருவையாறு ஆகிய வட்டச் சட்டப் பணிகள் குழுவின் அமர்வு களிலும் விசாரணை நடத்தப்பட்டது. இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம்  6,970 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 5,543 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.19,39,29,450 அளவுக்கு தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. முன்னதாக, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரும், சார்பு நீதிபதியு மான டி.பாரதி வரவேற்றார். குற்றவியல் நீதித் துறை நடுவர் எஸ். சுசீலா நன்றி கூறி னார்.

மாதர் சங்கத்தின்  மகளிர் தின விழாக்கள்

புதுக்கோட்டை, மார்ச் 9- அனைத்திந்திய ஜனநயாக மாதர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை உலக மகளிர்தின விழா கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட போஸ்நகர், மாப்பிள்ளையார்குளம், கந்தர்வகோட்டை ஒன்றியம் சொக்கம்பேட்டை, கறம்பக்குடி ஒன்றியம் சங்கம்விடுதி, திருவரங்குளம் ஒன்றியம் மழவராயன்பட்டி, அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட செந்தமிழ்நகர், திருமயம் ஒன்றியம் லெனின்நகர், ஆவுடையார்கோவில் ஒன்றியம் ஆவுடையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும், சங்கத்தின் கொடியை ஏற்றியும் உலக மகளிர்தின விழாக்கள் கொண்டாடப்பட்டன. இந்நிகழ்வுகளில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.சுசிலா, தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி, பொருளாளர் ஜெ.வைகைராணி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, மாதர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர்கள் முத்துமாரி, வி.கலைச்செல்வி, நித்யா, நாகூர் அம்மாள், ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை, மார்ச் 9 - உலக மகளிர் தினத்தையொட்டி சனிக்கிழமை புதுக்கோட்டையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சிவ.வீ.மெய்ய நாதன் ஆகியோர் வழங்கினர். அமைச்சர் எஸ்.ரகுபதி பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நடப்பு நிதியாண்டில் 12,361 மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.992 கோடி வங்கிக்கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 11,631 குழுக்களுக்கு ரூ.814.50 கோடி வங்கிக் கடன்  வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் 1,407 குழுக்க ளுக்கு ரூ.122 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை  வகித்தார். மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், துணை மேயர் எம்.லியாகத் அலி,  திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கே.ஸ்ருதி, கூட்டுறவு  சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

லாரி ஓட்டுநரை மிரட்டி  பணம் பறித்த 2 பேர் கைது

தஞ்சாவூர், மார்ச் 9 - மயிலாடுதுறை மாவட்டம், இலுப்பப்பட்டு வையாபுரி திடல் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி லாரன்ஸ் (32). லாரி ஓட்டுநரான இவர், புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் வழியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலத்துக்கு வியாழக் கிழமை (மார்ச் 6) லாரியில் ஜல்லி ஏற்றிச் சென்று கொண்டிருந்தார். தஞ்சாவூர் அருகே விமானப்படை தளம் பகுதியில் வந்த இந்த லாரியை பின்னால் வந்த கார் முந்திச் சென்று  வழிமறித்து நிறுத்தியது. காரிலிருந்து இறங்கிய நபர் காரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (ஆர்.டி.ஓ.) இருக்கிறார் என்றும், உரிமமும், அனுமதிச் சீட்டும் எங்கே எனவும் கேட்டார். நீங்கள் யார் எனக் கேட்ட பாரதி லாரன்ஸிடம், தான்  வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் ஓட்டுநர் எனக் கூறினார். மேலும், பாரதி லாரன்ஸின் சட்டைப் பையில் இருந்த உரிமம் மற்றும் ரூ. 16,500 ரொக்கத்தையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் ஓட்டுநர் எனக் கூறிய நபர் பறித்துக் கொண்டு காருக்குச் சென்றார்.  இதை பாரதி லாரன்ஸ் தட்டிக் கேட்டபோது, காரில் இருந்த ஓட்டுநர் எனக் கூறிய நபரும், மற்றொருவரும் காருடன் தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது.  இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலை யத்தில் பாரதி லாரன்ஸ் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசார ணையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் ஓட்டுநர்  ஏ.விவேகானந்தன் (49), பாபநாசம் அருகே நரியனூரைச் சேர்ந்த எஸ்.மாதவன் (39) இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

தினசரி இலவச பேருந்தில்  7.5 லட்சம் மகளிர் பயணம் போக்குவரத்து இயக்குநர் தகவல்

மதுரை, மார்ச் 9-  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில்  மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்க ளில் 2400 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மகளிர் விடியல் பயண திட்டம் ஆரம்பிக்கப் பட்டபோது தினசரி 4.5 லட்சம் மகளிர் பயணம் செய்து வந்தனர். இந்நிலையில் படிப்படியாக தொடர்ந்து தற்போது 7.5 லட்சம் மகளிர் தினசரி பயணம் செய்து வருகின்றனர்.  2021 முதல் 2025வரை 80 கோடி முறை மகளிர் பயணம்  செய்துள்ளனர். இந்நாள் வரை 702 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து களே செல்லாத இடம் இல்லை என்ற வகையில் சேவை  வழங்கப்படுகிறது. போக்குவரத்து சேவையில் கிராமப்புற பெண்களின் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சி ஆகியன மிகப்பெரிய மறுமலர்ச்சியை கண்டுள்  ளது. விரைவில் 671 புதிய பேருந்துகள் மக்களின் பயன்  பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று மதுரை தமிழ்நாடு  அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் சிங்காரவேலு தகவல் தெரிவித்துள்ளார்.

வீட்டில் மருத்துவம் பார்த்த செவிலியர் மீது வழக்குப்பதிவு

தேனி, மார்ச் 9- வீட்டில் மருத்துவம் பார்த்ததாக மருத்துவ அலுவலர்  கொடுத்த புகாரில்  செவிலியர் மீது க.விலக்கு காவல் நிலை யத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி க.விலக்கு பகுதியைச்  சேர்ந்தவர் தனபாண்டி மனைவி நித்யா(41). இவர்  10 ஆண்டுகளுக்கும் மேலாக தேனி அரசு மருத்துவக்கல்  லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து  வந்தார். இந்நிலையில் இவரது வீட்டில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக மருத்துவத்துறை உயர் அதி காரிகளுக்கு தகவல் வந்தது. இதனைத்தொடர்ந்து ஆண்டிபட்டி அரசு மருத்துவ மனை முதுநிலை உதவி மருத்துவர் சுரேஷ்குமார் தலை மையிலான குழுவினர் நித்யாவின் வீட்டில் திடீர் சோதனை  நடத்தினர். அப்போது அங்கு ஏராளமான ஊசிகள், மருந்து கள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சுரேஷ்குமார் க.விலக்கு காவல்  நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

8 குடும்பங்களை ஊரை விட்டு விலக்கி வைத்த சம்பவம் அறிக்கை அளிக்க தென்காசி ஆட்சியருக்கு  தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சிபிஎம் நடத்திய போராட்டத்தால் நடவடிக்கை

தென்காசி, மார்ச் 9- தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் 8 குடும்பங்களை ஊரை விட்டு விலக்கி வைத்த சம்பவத்தைக் கண்டித்து   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. இதன்விளைவாக அறிக்கை அளிக்குமாறு தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு  தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சாம்பவர் வடகரையில் ஊர் நாட்டாமையாக செயல்பட்டு வரும் வெங்கடேஷ் என்பவர் சட்டத்திற்கு புறம்பாக அரிசி கடத்தல் வியாபாரம் செய்து வருகிறார். விக்னேஷ் என்பவரின் நிலத்தை அவரது சித்தப்பா போலியாக பத்திரப்பதிவு செய்துள்ளார். இதனை விக்னேஷ்  தட்டிக் கேட்டதாலும் மற்றும் இவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 8 குடும்பங்களுக்கு ரூ.15 ஆயிரம்  அபராதம் விதித்து, ஊரை விட்டு விலக்கி வைத்தும், அந்த 8 குடும்பங்களுடன் யாரும் எந்தவிதமான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது எனவும், ஊர் பொதுமக்களுக்கு உத்தரவிட்டு தன்னை ஒரு சர்வாதிகாரியாகவே காட்டிக்கொண்டார். இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  போராட்டம்  நடைபெற்றது. கட்சியினர் கைது செய்யப்பட்டனர். சிபிஎம் நடத்திய போராட்டம் ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து சாம்பவர் வடகரை பிரச்சனை குறித்து 2 வார காலத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.