tamilnadu

img

வெள்ளியங்கிரி மலையில் குவியும் பிளாஸ்டிக்! வனத்துறை அலட்சியம் எனக் குற்றச்சாட்டு

அனைத்து அரசு அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும், என வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் செவ்வாயன்று மனித சங்கிலி இயக்கத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் சங்கத்தின் மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ராணி தலைமையில் நடைபெற்ற இந்த இயக் கத்தில், மாவட்டச் செயலாளர் சுரேஷ், பொருளாளர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளியங்கிரி மலையில் குவியும் பிளாஸ்டிக்!
வனத்துறை அலட்சியம் எனக் குற்றச்சாட்டு

வனத்துறையினரின் அலட்சியத்தால், வெள்ளியங்கிரி மலையில் பிளாஸ்டிக் கழிவு கள் குவிவதாக, சூழலியலாளர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். கோவை மாவட்டம், பூண்டியில் அமைந் துள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு அருகே உள்ள வெள்ளிங்கிரி மலைக்கு பிப்ரவரி முதல் மே மாதம் வரை மலையேற வனத்துறையினர் அனுமதி வழங்கி வரு கின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு பிப்ர வரி 1 முதல் பக்தர்கள் மலையேறி வருகின்ற னர். வெள்ளிங்கிரி மலைக்கு செல்பவர் கள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் எடுத்துச் செல்பவர் களிடம் டோக்கன் கொடுத்து ரூ.20 வசூலிக் கப்படுகிறது. கீழே இறங்கிய பின் டோக்கனை கொடுத்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். மேலும் பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் பிளாஸ்டிக் கவர்கள் அகற்றப்பட்டு காகிதங்களில் மடித்து கொடுக் கப்படுகின்றன. எனினும், வனத்துறையினர் முறையாக பணியில் ஈடுபடாததால் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களுடன் மலைக்குச் சென்று ஆங்காங்கே வீசிச் செல்கின்றனர். ஏற்கனவே மலையில் உள்ள குப்பைத் தொட் டிகளையும் முறையாக பயன்படுத்துவ தில்லை. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது. கடந்த சிவராத்திரி அன்று லட்சக்கணக் கானோர் வந்தபோதும் டன் கணக்கில் பிளாஸ் டிக் குப்பைகள் சேர்ந்தன. ஆறு கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மலைப்பகுதியில் ஆங் காங்கே குப்பைகளை கொட்டினால் அகற்று வது கடினம். வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட் டப்படுவதால் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மலைக்கு செல்பவர்களை முறையாக சோதனை செய்து மலையேற்றத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்றும், கூடுதல் குப்பைத் தொட்டி களை வைக்க வேண்டும் என்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் கூடுதலாக 40 குப்பைத் தொட்டிகள் வைக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. மேலும் பக்தர்களை முழுமையாக பரி சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள னர், என தெரிவித்தார்.