விதைகள் விற்பனைக்குத் தடை
விவசாயிகளுக்கு தரமான காய்கறி, பழப்பயிர் விதை கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விதை ஆய்வு சிறப்புக் குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின்போது, உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.9.88 லட்சம் மதிப்பிலான காய்கறி மற்றும் இதர விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. வேலூர் விதை ஆய்வு துணை இயக்குனர் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆய்வில், வட்டார வேளாண்மை விரி வாக்க மையங்கள், தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் அரசு விதை பண்ணைகளில் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. 54 விதை விற்பனை நிலையங்களில் இருந்து 119 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, விதை பரிசோதனை நிலையங்களுக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த விதை குவி யல்களின் தரம், கொள்முதல் ஆவணங்கள், பதிவேடுகள், தனியார் ரக விதைகளுக்கான பதிவு சான்றுகள், விதை பகுப்பாய்வு முடிவு அறிக்கைகள், இருப்பு பதிவேடு, விற் பனை ரசீது ஆகியவையும் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 16 விதை குவியல்களில் உரிய ஆவணங்கள் இல்லாததால், அவற்றின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தருமபுரி மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் மணி தெரிவித்துள்ளார்.
சில்லஹல்லா நீர்மின் திட்டத்திற்கு எதிர்ப்பு
குந்தா ஆற்றின் துணை ஆறான சில்ல ஹல்லா ஆற்றின் குறுக்கே பிரமாண்ட அணை கட்ட தமிழக அரசு திட்டமிட் டுள்ளது. ரூ.7,000 கோடி மதிப்பீட்டில் 2,000 மெகாவாட் திறன் கொண்ட இந்த நீர்மின் திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் 20 கிராம ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே சில் லஹல்லா மற்றும் குந்தா ஆறுகளின் குறுக்கே இரண்டு அணைகள் கட்ட திட்ட மிடப்பட்டுள்ளது. 2.8 கிலோமீட்டர் தூரத் திற்கு குகை வழி நீர்க்குழாய்கள் அமைக் கப்படும். மொத்தம் 315 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்படும், இதில் 134.7 ஹெக்டர் விவசாய நிலம். இதில், பால கோலா, இத்தலார், கீழ் குந்தா உள்பட 818 குடும்பங்கள் தங்கள் நிலங்களை இழக்க நேரிடும் எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகை யில், பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கடிக்கப்படும். சுமார் 2,000 விவ சாயிகள் பாதிக்கப்படுவார்கள். பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டி ராட்சத குழாய் கள் அமைப்பதால் இயற்கை பேரிடர் அபா யம் உள்ளது. முக்குருத்தி தேசியப் பூங்கா விற்கு அருகில் திட்டம் அமைவதால் வன உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படும். நீலகிரியில் கூட்டு பட்டா இருப்பதால், நிலங்களை கையகப்படுத்தி நிவாரணம் கொடுப்பதில் சிக்கல் உள்ளது. கழிவுகள் கலந்து வரக்கூடிய நீரோடையில் இந்த அணைகள் அமைய உள்ளது. எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்றும், இல்லா விட்டால் 20 கிராம ஊர் மக்களை திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும், என் றனர். மேலும், வருகிற 20 ஆம் தேதியன்று குந்தா தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத் தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத் தில் 15 கிராம மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக கூறப்படு கிறது.