tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சேலத்தில் சிறப்பு கருத்தரங்கங்கள்

சிபிஎம் அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு, சேலம் மாவட் டத்தில் சிறப்பு கருத்தரங்கங்கள் நடைபெற உள்ளன. இதுகுறித்து சேலம் மாவட்ட அமைப்புக்குழு ஒருங் கிணைப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளதாவது, மதுரையில், மார்க்சிஸ்ட் கட்சியின் அகில  இந்திய மாநாடு எழுச்சிகரமாக நடைபெற உள்ளது. இம் மாநாட்டையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு கருத் தரங்கங்கள் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக, சேலம் மாவட்டத்தில், மார்ச் 13 ஆம்தேதி ஜலகண்டா புரத்தில் நடைபெறும் கருத்தரங்கத்தில், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக் குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், ஏ.குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.  மார்ச்  13 அன்று ஆத்தூரில் நடைபெறும் கருத்தரங்கில், சிபிஎம் மத் தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில குழு உறுப்பினர் பி. செல்வசிங் ஆகியோரும், மார்ச் 14 ஆம்தேதி சேலம் மாநக ரத்தில் நடைபெறும் கருத்தரங்கத்தில், கட்சியின்  மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், கே. சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 வெற்றி: 
தருமபுரி ஆட்சியர் பாராட்டு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பி எஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று பல்வேறு  அரசுத் துறைகளில் பணியில் சேர்ந்த 15 மாணவ, மாணவி களுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி  வழிகாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வப் பயி லும் வட்டத்தில் இலவசப் பயிற்சி பெற்ற மாணவர்கள் இந்த  வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த மையத்தில் 3000-க்கும்  மேற்பட்ட போட்டித் தேர்வு புத்தகங்கள், இணைய வசதி  மற்றும் 20-க்கும் மேற்பட்ட கணினிகள் உள்ளன. இம்மையத்தில் 2023-24 ஆம் ஆண்டில் குரூப் 4 தேர்விற்கு  70 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். இவர்களில் 15 பேர்  வெற்றி பெற்று அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர். பாராட்டு  விழாவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா மற்றும்  அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சேலத்தில் 150 ஆண்டு பழமையான 
நீதிமன்ற கட்டிடம் புதுப்பித்து திறப்பு

சேலத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 150 ஆண்டுகள் பழமையான நீதிமன்ற கட்டிடம், பழமை மாறா மல் புதுப்பிக்கப்பட்டு திங்களன்று திறக்கப்பட்டது. சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற  வளாகத்தில் தற்போது 32 நீதிமன்றங்கள் செயல்பட்டு வரு கின்றன. இதில், 1867 முதல் 1877 ஆம் ஆண்டுகளுக் கிடையே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கலைநயத்துடன் கட்டப்பட்ட பிரம்மாண்ட நீதிமன்றம் இயங்கி வருகிறது. சுமார்  150 ஆண்டுகள் பழமையான கட்டிடமாக இது இருந்தாலும்,  அதன் உறுதித்தன்மை மாறாமல் இருந்ததால், இந்த கட்டி டத்தை பராமரிக்க சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய் தது. இதைத் தொடர்ந்து, தொல்லியல் துறை அதிகாரிகள் அந்த கட்டிடத்தில் ஆய்வு செய்தனர். அதன்பேரில், கடந்த  2020 ஆம் ஆண்டு இந்த நீதிமன்ற கட்டிடத்தை புனர மைக்க ரூ. 6.36 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்காக சுண் ணாம்பு, கருப்பட்டி, கோழிமுட்டை, கடுக்காய், ஆற்று  மணல் ஆகியவை கொண்டு சீரமைப்பு பணிகள் நடைபெற் றன. இப்பணிகளை மேற்கொள்ள திருநெல்வேலி, தஞ்சாவூர்  ஆகிய இடங்களில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக் கப்பட்டனர். மேலும், இக்கட்டிடத்தில் புகழ்பெற்ற ஆத்தங் குடி டைல்ஸ் பதிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த பணிகள்  அண்மையில் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, திங்க ளன்று முதல் இந்த நீதிமன்றம் செயல்பட தொடங்கியது. முதல்  கட்டமாக, இதில் தொழிலாளர் நீதிமன்றம், அத்தியாவசியப் பண்டங்கள் மற்றும் போதைப் பொருட்கள் சிறப்பு நீதி மன்றங்கள் இயங்கும் என மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி  தெரிவித்துள்ளார்.

உதகை மலைப் பூண்டு விலை வீழ்ச்சி

உதகை, மார்ச் 11 – மலைப்பிரதேச மான நீலகிரி மாவட்டத் தில் விளையும் உதகை  மலைப் பூண்டின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இத னால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ள னர். நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு,  முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப் படுகின்றன. இதனை அடுத்து உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மலைப்பூண்டு அதிக அளவில் பயிரிடப் படுகிறது. உதகையில் விளையும் மலைப்பூண்டு மருத்துவ  குணம் கொண்டதால் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும்  வெளி மாநிலங்களிலும் அதிக அளவில் கொள்முதல் செய்யப் படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ மலைப் பூண்டு ரூ.200 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப் பட்டது. தற்போது வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒரு கிலோ  மலைப்பூண்டு ரூ.40 முதல் ரூ.50 வரை மட்டுமே விற்பனை  செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந் துள்ளனர். உரிய விலை கிடைத்தால் மட்டுமே தங்களின் வாழ்வாதா ரம் பாதுகாக்கப்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுத்து உதகை மலைப்  பூண்டிற்கு உரிய விலை கிடைக்கச் செய்ய வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.