டன் ஒன்றுக்கு ரூ.5,500 வழங்க கோரி
கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ண்டும், 2017 ஆண்டுகளில் கரும்பு விவ சாயிகளுக்கு சேர வேண்டிய எஸ்.ஏ.பி பாக்கி தொகை ரூ.1200 கோடியை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாநில அரசே உடனே பெற்று கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. ஆலை சங்கத் தலைவர் எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் சு.வேல்மாறன் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார். ஆலை சங்க பொருளாளர் எம்.பழனி, விவசாயிகள் சங்கத்தின் கண்டாச்சி புரம் வட்டத் தலைவர் எம்.ராமலிங்கம், கள்ளக்குறிச்சி மாவட்ட குழு உறுப்பி னர் எம்.ஏழுமலை, வட்டச் செய லாளர் பி.சேட்டு மற்றும் ஆர்.விஜயகுமார் எம்.கணேசன் எம்.தங்கவேல் ஏ.சிவம் பி.ஜெகநாதன் பி.பொன்னுசாமி பி. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வளவனூர் கடை வீதியில் நடைபெற்ற தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு சுதந்திரம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆலை சங்க செயலாளர் ஆர்.தாண்ட வராயன், வழக்கறிஞர் ஏ.சங்கரன், ஆர்.கண்ணப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் என்.பழனி, வட்ட தலைவர் ராஜாராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நெல்லிக்குப்பம் தமிழக அரசு அறிவித்த கரும்பு ரகங்களை நடவு செய்தால் ஆலை நிர்வாகமே பதிவு செய்ய வேண்டும், நெல்லிக்குப்பம் ஈஐடி பாரிக் சர்க்கரை ஆலை லாப பங்கு தொகையை உடனே வழங்க வேண்டும், நான்கு ஆண்டு கால கரும்பு பணம் எஸ்.ஏ.பி ரூ. 158 கோடியை விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லிக்குப்பம் ஈஐடி பாரி கரும்பு ஆலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஈஐடி பாரி செயலாளர் ஆர். தென்னரசு தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் கோ. மாதவன், மாவட்டச் செயலாளர் ஆர்.கே. சரவணன், ஈ.ஐ.டி பாரி சங்கத் தலைவர் ஆர். லோகநாதன் கரும்பு விவசாய சங்கத்தின் ஜே. ராமலிங்கம் உள்ளிட்டோர் உரையாற்றினர்.