48ஆவது சென்னை புத்தகக்காட்சி டிச.27 - ஜன.12ந் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் நடைபெற உள்ளது. இதனையொட்டி புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சனிக்கிழமையன்று (டிச.21) நந்தனத்தில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நடை நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகர மேயர் ஆர். பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.