districts

img

அமித்ஷாவை பதவி நீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

பாபாசாகேப் அம்பேத்கரை அவதூறு செய்து பேசிய ஆணவமிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்யக்கோரி வெள்ளியன்று (டிச.20) நமச்சிவாயபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சேகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், வே.தனலட்சுமி, எஸ்.வி வேணுகோபாலன், ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் வே.இரவீந்திரபாரதி, பகுதிக்குழு உறுப்பினர் இரணியன், அம்பேத்கர் மன்ற செயலாளர் வாசுதேவன் உள்ளிட்டோர் பேசினர்.