tamilnadu

150 இடங்களில் விதொச ஆர்ப்பாட்டம்

... 1ஆம் பக்கத் தொடர்ச்சி ... வந்து சென்றுள்ளன. பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகள் என்று தங்களை பிதற்றிக் கொள்ளும் பாஜகவினர், அந்த  பெரும்பான்மை மக்களை, விழாக் காலங் களில் கூட கையில் காசு இல்லாமல் விழிபிதுங்கி நிற்க வேண்டிய அவலத்திற்கு தள்ளியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவர் வி.பி. நாகை மாலி, சம்பளப் பாக்கியைக் கேட்டு, ஜனவரி  12 அன்று சட்டமன்றத்தில் வலியுறுத்தி யதை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் பிர தமருக்கு கடிதம் எழுதினார். தமிழ்நாடு  நிதி யமைச்சர் ஒன்றிய அரசின் நிதியமைச்சரைச் சந்தித்தார். இவ்வாறு தமிழகத்தின் சார்பில் தொடர்ச்சியான தலையீட்டை செய்தபோதி லும் ஒன்றிய பாஜக அரசு வேலைசெய்து சம்பளப்பாக்கிக்காக காத்திருக்கும் தொழி லாளர்களிடம் ஈவிரக்கமற்ற முறையில் நடந்து வருகிறது. எனவே, ஒன்றிய அரசின் இந்த அராஜக  நடவடிக்கைகளை கண்டித்தும், உடனடி யாக சம்பளப் பாக்கியை விடுவிக்க வேண்டும், 100 நாட்களும் வேலையை முழு மையாக வழங்க வேண்டும், வேலை நாட்களை 200 நாட்களாகவும், தினக்கூலி யை 600 ரூபாயாகவும் உயர்த்திட வேண்டும், 2025-26 நிதிநிலை அறிக்கையில் ஊரக வேலைத் திட்டத்திற்கு நான்கு லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், 150-க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வியாழனன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில், 30,000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  தேனி மாவட்டம் சின்னமனூரில், சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர்  ஏ. லாசர், திருவாரூர் மாவட்டம் குடவாச லில் மாநிலத் தலைவர் எம். சின்னதுரை எம்எல்ஏ, நாகப்பட்டினம் மாவட்டம் தலை ஞாயிறில் பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம், திருச்சி மாவட்டம் திரு வெறும்பூரில் பொருளாளர் அ. பழனிச்சாமி ஆகியோர் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்.