tamilnadu

img

வக்பு திருத்த மசோதாவைக் கண்டித்து மாநில ஜமாஅத்துல் உலமா பொதுக்கூட்டம்

வக்பு திருத்த மசோதாவைக் கண்டித்து  மாநில ஜமாஅத்துல் உலமா பொதுக்கூட்டம் 

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த மசோதாவைக் கண்டித்து தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சார்பாக திருவாரூர் தெற்குவீதியில் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி சிறப்புரையாற்றினார். அமைப்பின் மாவட்டத் தலைவர் டி.எம்.ஏ. முஹம்மது இல்பாஸ் தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பூண்டி கே.கலைவாணன், சிபிஎம் மாநிலசெயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்டச் செயலாளர் டி.முருகையன் மற்றும் அமைப்பின் மாநில நிர்வாகி மௌலானா ஃபக்ருதீன் பாகவி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன், விசிக மைய மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட தோழமை அமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். கூட்டத்தில் ஒன்றிய பாசிச மோடி அரசைக் கண்டித்தும், வக்ப் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டு ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.