சிறப்பு கண் மருத்துவ முகாம்
பாபநாசம், மே 11- சோழன் மழலையர் தொடக்கப் பள்ளி, அக்கினிச் சிறகுகள் அறக் கட்டளை, கோவை சங்கரா கண் மருத்துவ மனை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து நடத்திய இலவச சிறப்பு கண் மருத்துவ முகாம் நடை பெற்றது. திருக்கருக்காவூர் சோழன் பள்ளி வளாகத்தில் நடந்த முகாமை உக்கடை அ. அப்பாவு தேவர் மேல்நிலைப்பள்ளி தலைவர் விஸ்வநாத தேவர் தொடங்கி வைத்தார். முன்ன தாக, முகாமில் பள்ளி தாளாளர் சிவசண்முகம் வரவேற்றார். இதில் முன்னாள் ஊராட்சி உறுப்பினர் அய்யாராசு, தஞ்சாவூர் ஸ்ரீல ஸ்ரீ சத்திய நாராயண சித்தர் ஆஸ்ரமம் தலைவர் செழியன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் 50 பேருக்கு மேல் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் கண் புரை முற்றிய நிலையில் இருந்த 14 பேரை, கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, லென்ஸ் பொருத்தி பார்வையளிக்க கோவை அழைத்துச் சென்றனர். முகா மில் பங்கேற்றவர்களுக்கு இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறியப்பட்டது. மதிய உணவு வழங்கப்பட்டது.