காலனி என்ற சொல்லை அகற்றிய முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் பாராட்டு
வசிக்கும் பகுதிகளை காலனி என்று அழைக்கக்கூடாது என்றும் அந்த சொல்லை பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்ட தமிழக அரசுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், எஸ்.பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த, பி.காசிநாதன் -பேபி தம்பதியின் மகன் டாக்டர் இனியவன்- டாக்டர் பூஜாஸ்ரீ ஆகியோர் திருமணம் ஞாயிறன்று (மே 11), கவரைப்பேட்டையில் சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ் ணன் தலைமையில் எளிய முறையில், சடங்கு கள் இன்றி நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மூத்த உறுப்பினர்கள் ப.சுந்தர ராஜன், கே.செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.துளசிநாராயணன், ஜி.சம்பத், விசிக மாவட்டச் செயலாளர் எஸ்.நீலமேகம், ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மைய நிறுவனர் பேராசிரியர் பி.அண்ணாதுரை, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், முனைவர் எஸ்.ஜெகஜீவன்ராம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.அனீப், எஸ்.இ சேகர்,இ தவமணி, டி.கோபாலகிருஷ்ணன், ஜி.சூரியபிரகாஷ், இ.எழிலரசன் உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தினர். இதில் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், சாதியற்ற சமூ கத்தை அமைக்க வேண்டும் என உறுதி யுடன் களம் காணும் வகையில் கம்யூனிஸ்டு கள் இருந்து வருகிறோம். இன்றைக்கு ஆண்கள், பெண்கள் சமமாக நாற்காலி களில் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்றால், இதற்கு இடதுசாரிகள் ஏராளமான போராட்ட ங்களை முன்னெடுத்து உள்ளனர். இன்றை க்கும் பெண்களை அடிமைப்படுத்தும் கொடு மைகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழ லில் காலனி என்கிற இழிவுச் சொல்லை அகற்றியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உத்தரவை வரவேற்கிறோம். சாதிய கொடுமை, சமுக கொடுமைகளை எதிர்த்தும், சமத்துவ சமுதாயத்தை உரு வாக்க, நல்ல இந்தியாவை உருவாக்க இடது சாரிகளுடன் இணைந்து போராட அனைத்து சமூக மக்களும் முன்வர வேண்டும் என்றார். நிறைவாக மணமக்கள் இனியவன் - பூஜாஸ்ரீ ஆகியோர் நன்றி கூறினர்.