சென்னையில், ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை சரிந்து, சவரனுக்கு ரூ.2,360 குறைந்துள்ளது.
தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.71,040-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், மாலையில் 4 மணியளவில் சவரன் மேலும் ரூ.1,040 குறைந்து ரூ.70,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்துள்ளது.
அதேபோல் காலையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.109க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், மாலையில் ரூ.1 உயர்ந்து மீண்டும் ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது.