வைகையில் இறங்கிய கள்ளழகர்
மதுரையில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29 அன்று துவங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு திங்களன்று அதிகாலை நடைபெற்றது. வளமையை குறிக்கும் விதமாக பச்சைப் பட்டுடுத்தி வைகையில் கள்ளழகர் இறங்கினார். லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.