அரசு மருத்துவமனையில் செவிலியர் தினக் கொண்டாட்டம்
கோவை, மே 12- உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில், செவிலியர்கள் கேக் வெட்டியும், கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக மாக கொண்டாடினர். ஒவ்வொரு ஆண்டும் மே 12 ஆம் தேதியன்று உலக செவிலி யர்கள் தினம் கொண்டாடப்படு கிறது. இந்த ஆண்டு உலக செவி லியர்கள் தினத்தை முன்னிட்டு திங்களன்று கோவை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் சுமார் 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கேக் வெட்டியும், ஆடல், பாடல் என உற் சாகமாக கொண்டாடினர். மேலும், செவிலியர்களுக்கான ஓவியப் போட்டி, கோலப்போட்டிகள், முக ஓவியம் நிகழ்வுகள் ஆகியவை நடத்தப்பட்டது. தொடர்ந்து செவி லியர்கள் மெழுகு வர்த்தியை கையில் ஏந்தி, பாகுபாடு இன்றி அனைத்து மக்களுக்கும் பணி யாற்ற வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் செவிலியர்களின் குழந்தைகள், கோவை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா மற்றும் அனைத்து துறை மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து பேசிய செவிலியர் தாரகேஷ்வரி, நைட்டிங்கேல் அம் மையார் பிறந்தநாளை முன்னிட்டு செவிலியர் தினமாக கொண்டாடி வருகிறோம். மே 12 அவரது பணி கள், சேவைகளை மக்களிடம் நடந்து கொள்ளும் விதம் உள்ளிட் டவை நினைவு கூறுகிறோம். ஓய்வு இல்லாமல் 24 மணி நேரமும் பணி யாற்றும் செவிலியர்கள் இந்த ஒரு நாள் கொண்டாடத்துடன் பணியும் செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருவுடன் செவிலியர் கள் தினம் கொண்டாடப்படும் நிலை யில் இந்த ஆண்டு செவிலியர் கள் சேவை மற்றும் பாதுகாப்பு கருவை கொண்டு கொண்டாடப் பட்டது என தெரிவித்தார். இதேபோன்று பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்து வமனையில் மருத்துவமனை கண் காணிப்பாளர் டாக்டர் ராஜா தலை மையில் சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் அனைவரும் ஒரே கலரில் சேலை உடுத்தி கொண் டாடினார்கள். இந்நிகழ்வில் சிறப் பாக பணியாற்றிய அனைத்து துறை செவிலியர்களுக்கும் அவர்களு டைய சேவையை பாராட்டி மருத்து வமனை கண்காணிப்பாளர் மூலம் கேடயம் வழங்கப்பட்டது. நாமக்கல் நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் ஆவரங்காடு அரசு மருத்துவமனையில் நடைபெற்ற செவிலியர் தின கொண்டாட்ட நிகழ்வில் செவிலியர்கள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி னர். அரசு தலைமை மருத்துவர் வீர மணி செவிலியர்களுக்கு வாழ்த் துக்களை தெரிவித்தார்.
கோரிக்கை அட்டை அணிந்து
செவிலியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி உலக செவிலியர் தினமான மே 12 (திங்கட்கிழமை) திமுக தேர் தல் வாக்குறுதி எண் 356 இல் குறிப்பிட்டது போல் அனைத்து தொகுப் பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவுப் படி எம்.ஆர்.பி தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். எம்.ஆர்.பி தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். வெளிப்படையான பணியிட மாற்ற கலந் தாய்வு நடத்திட வேண்டும். செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும். நோயாளிக ளின் எண்ணிக்கைக்கு ஏற்ப என்எம்சி மற்றும் ஐபிஎச்எஸ் பரிந்துரை களின் அடிப்படையில் நிரந்தர செவிலியர் பணியிடங்கள் உருவாக் கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவ மனைகளில் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்ததுடன் தமிழ் நாடு முதல்வருக்கு கோரிக்கைகளை அடங்கிய மனுவை அஞ்சல் அட்டை மூலம் அனுப்பி வைத்தனர்.