tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

செந்தொண்டர்களுக்கு பாராட்டு

ஈரோடு, மே 12- மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பங் கேற்ற செந்தொண்டர்களை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் கௌரவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற செம்படையினருக்கு பாராட்டு விழா  ஆப்பக்கூடலில் திங்களன்று நடைபெற்றது. பவானி தாலுகா  செயலாளர் ஆர்.பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ் வில், மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஜி.பழனிசாமி, பிபி.பழனிசாமி, ஆர். கோமதி, எஸ்.வி.மாரிமுத்து, பி.சுந்தரராஜன் மற்றும் விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி ஆகி யோர் பங்கேற்று செந்தொண்டர்களை கௌரவித்தனர்.. தொடர்ந்து செம்படையினருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மாணிக்கம், கோபி தாலுகா செயலாளர் க.பெருமாள் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில், திருநீல கண்டன் நன்றி கூறினார்.

பழங்குடியின மாணவியின் சாதனை வெற்றி: சிபிஎம் கௌரவிப்பு

மேட்டுப்பாளையம், மே 12 - பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் சாதனை புரிந்த பழங் குடியின மாணவிக்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பரிசு கள் வழங்கி கௌரவித்தனர். கோவை, மேட்டுப்பாளையம் காரமடை ஒன்றியம் சிளி யூர் துரைசாமி கவுடர் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம்  வகுப்பு பொது தேர்வில் 561 மதிப்பெண் பெற்ற பழங்குடி யினர் சமுதாயத்தை சார்ந்த மாணவி காயத்ரிக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு, மருத்துவர் அரங்கம், வங்கி ஊழியர்கள் அரங்கம் ஆகிய அமைப்பு களின் சார்பில், மாணவியை நேரில் சந்தித்து பரிசுகள் வழங்கி  வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிகழ்வில், சிபிஎம் தாலுகா செயலாளர் கா.கனக ராஜ், சீளியூர் கிளைச் செயலாளர் கந்தசாமி மற்றும் மருத்து வர், வங்கி ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்ற னர். முன்னதாக, வனப்பகுதி வழியே தினசரி ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கல்வி பயின்ற மலைக்கிரா மத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி காயத்திரி குறித்த செய்தி தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியான நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்பட பல்வேறு சமூக  நல அமைப்புகள் மாணவியின் சாதனையை பாராட்டி பரிசு களை வழங்க முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் தகுந்த வழிகாட்டுதல் செய்து தருவோம் என தலை வர்கள் மாணவியிடம் உறுதியளித்தனர்.

காது கேளாதோர் வாய் பேசாதோர் அமைப்புக் கூட்டம்

நாமக்கல், மே 12- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காது  கேளாதோர், வாய் பேசாதோர் மாவட்ட சிறப்பு கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந் துள்ள வி.ராமசாமி நினைவகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பில் ஞாயிறன்று காது கேளாதோர், வாய் பேசாதோர் மாவட்ட சிறப்பு கிளை அமைப்புக் கூட்டம்  பழனிவேல் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனா ளிகள் சங்க மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன் முன் னிலை வகித்தார். இதில் காது கேளாதோர், வாய் பேசா தோர் மாநில சிறப்பு கிளை மாநிலச் செயலாளர் எம்.சொர்ண  வேல், சிறப்பு கிளை மாநிலப் பொருளாளர் பி.பவானி, சிறப்பு  கிளை மாநிலக் குழு உறுப்பினர்கள் அரவிந்த் மற்றும் மோகன  காமராஜ், மூத்த தலைவர் ஏ.ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சார்பில் வழங் கப்படும் சலுகைகள் குறித்தும் அதை எவ்வாறு முறை யாக பெறுவது என்பது குறித்து பேசினார்கள்.  இதில், மாவட்ட காது கேளாதோர் வாய் பேசாதோர் சிறப்பு  கிளைத் தலைவராக எம்.ஆர்.முருகேசன், செயலாளராக விஜ யகுமார், துணைத்தலைவராக பழனிவேல், துணைச் செயலா ளராக மதன்குமார், நிர்வாகிகளாக எம்.வினோத் மற்றும் கமிட்டி உறுப்பினர்களாக மூர்த்தி, தினேஷ், சந்திரன், கேச வன், கௌரிசங்கர், அர்ஜுனன்  ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். மாவட்டம் முழுவதும் அமைப்பை வலுவாக கட்ட மைப்பது, மாற்றுத்திறனாளிகளுக்காக அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் உடனுக்குடன் கிடைக்கும் வகை யில் தொடர்ந்து பணியாற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

லுங்கி விற்பனை மந்தம்: தொழிலாளர்கள் கவலை

நாமக்கல், மே 12- பள்ளிபாளையத்தில் லுங்கி விற்பனை குறைந்ததால், தயாரிப்பும் குறைந்துள்ளது. இதனால் விசைத்தறித் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விசைத் தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு லுங்கி, வேட்டி, சேலை, துண்டு உள் ளிட்ட துணி வகைகள் உற்பத்தி செய்யப் படுகிறது. பெரும்பாலான விசைத்தறிக் கூடங் களில் லுங்கி அதிகளவு உற்பத்தி செய் யப்பட்டு வருகிறது. பள்ளிபாளையத்தில் உற் பத்தியாகும் லுங்கி, தமிழ்நாடு மட்டு மின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் விற் பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந் நிலையில், தயாரிப்பு அதிகளவு நடை பெற்று வந்த நிலையில், தற்போது லுங்கி  விற்பனை மந்தமாகியுள்ளதால் ஆர்டர் குறைந்துள்ளது. இதனால் லுங்கி தயா ரிப்பும் கணிசமான அளவில் குறைந்துள்ளது. இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர் சர வணன் என்பவர் கூறுகையில், கடந்த ஒரு  மாதமாக லுங்கி விற்பனை மிகவும் மந்த மாக உள்ளது. எதிர்பார்த்த ஆர்டர்கள் வருவ தில்லை. ஏற்கனவே தயாரித்து வைக் கப்பட்டுள்ள லுங்கியும், விற்பனையின்றி தேக்கமடைந்துள்ளன. இரவு, பகலாக தொடர்ந்து லுங்கி உற்பத்தி பணிகள் நடை பெற்ற வந்த நிலையில், தற்போது விற்பனை  மந்தமானதால், கடந்த சில வாரங்களாக பகல் நேர வேலை மட்டுமே நடைபெற்று வரு கிறது. இதனால் கணிசமான தொழிலா ளர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளதாக தெரி வித்தார்.

மே 20 வேலை நிறுத்த போராட்டம்:  அனைத்து பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு

திருப்பூர், மே 12- மே 20 வேலை நிறுத்த போராட்டத்தை முன்னிட்டு போராட்டக் குழு அமைத்து அனைத்து பகுதிகளிலும் பிரச்சாரம் மேற் கொள்வது என அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பனியன் தொழிற்சங்க கூட் டம் திங்களன்று ஏஐடியுசி மாவட்ட அலுவ லகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு எல்பிஎப் பனியன் சங்க பொருளாளர் பூபதி  தலைமை வகித்தார். சிஐடியூ பனியன் சங்க  பொதுச் செயலாளர் ஜி.சம்பத், ஏஐடியூசி பனி யன் பேக்டரி லேபர் யூனியன் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.சேகர், ஐஎன்டியுசி பனியன் சங்க பொதுச் செயலாளர் சிவ சாமி, எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் முத்து சாமி, எம்எல்எப் பனியன் சங்க செயலாளர்  வெங்கடாசலம் டிடிஎம்எஸ் பனியன் சங்க  செயலாளர் மனோகரன் ஆகியோர் கலந்து  கொண்டனர். இதில், மே 20 வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி ஆயிரக்கணக்கில் துண்டறிக்கை அச்சிட்டு விநியோகிப்பது.  1000 போஸ்டர் போடுவது, திருப்பூரில் உள்ள பிரதான சலைகளில்  பத்துப் பேர் கொண்ட போராட்டக் குழு அமைத்து பிரச்சாரம் மேற்கொள்வது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.