tamilnadu

img

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க பேரணி, கூட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து  ஊழியர் சங்க பேரணி, கூட்டம்

திருத்துறைப்பூண்டி, மே 12-  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பேரணி மற்றும் பேரவை நடைபெற்றது.  திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் பி.எஸ்.ஆர். நினைவு மண்டபத்தில் பேரணி தொடங்கி, நகரத்தின் முக்கிய சாலை வழியாக தியாகி சிவராமன் நினைவிடத்தில் நிறைவடைந்தது. பிறகு சங்கத்தின் கொடியேற்றப்பட்டது.  நிகழ்விற்கு தலைவர் ஏ. கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் கே. ஐயப்பன் கொடியேற்றினார். துணை பொதுச் செயலாளர் எம். ராமகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார். துணை பொதுச் செயலாளர் எம்.மோகன் வரவேற்புரை ஆற்றினார். சம்மேளன துணைத் தலைவர் எம். கண்ணன் துவக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர் எஸ்.ஆர். இராஜேந்திரன் அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் எஸ். வைத்தியநாதன் வரவு - செலவு கணக்கு வைத்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஏ. கோவிந்தராஜ் தலைவராகவும், எஸ். வைத்தியநாதன் பொதுச் செயலாளராகவும், என். பாரதிமோகன் பொருளாளராகவும், எம். மோகன் துணை பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.