tamilnadu

img

மலைவாழ் மக்களை வஞ்சிக்க வனத்துறை நடத்திய கூட்டம்

மலைவாழ் மக்களை வஞ்சிக்க வனத்துறை நடத்திய கூட்டம்

உடுமலை, மே.12- மலைவாழ் மக்களை வஞ்சிக்கும்  நோக்கத்தில் வனத்துறையினர் தங்க ளுக்கு ஆதரவாக செயல்படும் விவ சாயிகள், அவர்கள் சார்ந்த சங்கத்தி னருக்கு மட்டும் அழைப்பு விடுத்து குறைதீர் கூட்டம் நடத்தினர். இதில்  மலைவாழ் மக்களுக்கும், வன உரி மைச் சட்டத்துக்கும் எதிரான கருத் தைப் பேச வைத்து கருத்துருவாக் கம் செய்யும் முயற்சி அரங்கேற்றப் பட்டது. விவசாயிகளின் குறைகளைத் தீர்க்கும் வகையில் வனத்துறை மாதம் ஒரு முறை குறைதீர்ப்புக் கூட் டம் நடத்தி வருகிறது. இம்மாத கூட் டம் 12ஆம் தேதி திங்களன்று மாவட்ட  வனத்துறை அலுவகத்தில் மாவட்ட  வன அலுவலர் ராஜேஸ் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வனப்பகுதியில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகு திகள் மற்றும் மலைப்பகுதியில் விவ சாய நிலங்கள் இருப்பதால்தான் தரைப்பகுதியில் இருக்கும் விவசாய  நிலங்களை வனவிலங்குகள் சேதப் படுத்தி வருகிறது என்று விவசாயி கள் சிலர் பேசினர். இவ்வாறு பேசு வது வனஉரிமை சட்டத்திற்கு எதிரா னது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து விளக்கி இருக்க வேண் டும். ஆனால், அவர்கள் உள்நோக் கத்துடன் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.  மலைவாழ் மக்களை வஞ்சிக்கும்  வகையில் வனத்துறை அதிகாரிகள்  தங்களுக்கு ஆதரவாக இருப்பவர் களை வைத்துக்கொண்டு தொடர்ச்சி யாக தவறான தகவல்களைப் பரப்பி  வருகிறார்கள். இது குறித்து தமிழ்நாடு விவசாய  சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர் மதுசூதனன் தெரிவிக்கை யில், விவசாயிகள் சந்திக்கும் பிரச்ச ணைகளுக்குத் தீர்வு கிடைக்க, பல் வேறு போராட்டங்களை நடத்திய சங் கங்களுக்கு அழைப்புத் தராமல் தங்க ளுக்கு ஆதரவாக செயல்படும் சிலரை வைத்து கொண்டு, குறை தீர்ப்பு கூட்டம் நடத்திய வனத்துறை  அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வன உரிமை சட்டப்படி பல போராட்டங்களை நடத்தி, சட்டரீ தியாக மலைவாழ் மக்கள் நடை முறை சலுகைகளை பெற்றுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாத உடுமலை வனத்துறை அதிகாரிகள், அம்மக்களுக்கு எதிராக தொடந்து  செயல்பட்டு வருவதன் தொடர்ச்சியா கவே இந்தக் கூட்டமும் நடத்தப்பட் டுள்ளது. மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு சாலை அமைக்க தமிழக  அரசு நிதி ஒதுக்கியும், அதை நடைமு றைப்படுத்த வனத்துறை முட்டுக் கட்டை போட்டு வருகிறது. இதனால் பல உயிர்கள் இழக்கப்பட்டுள்ளது. ஒருதலைபட்சமாக நடைபெற்ற இக் கூட்ட முடிவுகளை தமிழக அரசு மற் றும் மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றார்.