tamilnadu

img

எம். சாண்ட், ஜல்லி விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

எம். சாண்ட், ஜல்லி விலை  உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டட பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் சிவனேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கட்டுமான தொழிலின் முக்கிய மூலப்பொருளான எம்.சாண்ட், பி. சாண்ட், ஜல்லி விலை ஏற்றத்தை கண்டித்தும், ஆற்று மணல் குவாரிகளை உடனடியாக அரசு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டுமான துறைக்கென மத்தியில் மாநிலத்திலும் தனித் துறை அமைக்க வேண்டும். கட்டுமான பொருள் விலையை அரசே நிர்ணயம் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர் சண்முகராஜ், மாநில பொறுப்பாளர் சையது ஜாகீர் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.