tamilnadu

மதுரை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் சிறப்பு அம்சங்கள்

மதுரை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் சிறப்பு அம்சங்கள்

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வியாழக்கிழமை அன்று திறந்து வைத்தார். இந்த மைதானத்தின் சிறப்பு அம்சங்களைப் பற்றி காணலாம் : 11.25 ஏக்கரில் அமைக்கப் பட்டுள்ள இந்த மைதானத்தில் பயிற்சி மைதானம், வீரர் ஓய்வறை, ஜிம், மருத்துவ வசதி, 20,000 இருக்கைகள் மற்றும் 500 கார்கள் பார்க்கிங் வசதி உள்ளன. மேலும் மழைக்காலத்திலும் விரைவாக போட்டி தொடங்க சிறந்த வடிகால் அமைப்பு, மைதானத்தைச் சுற்றி 5 அடி ஆழமுள்ள மழைநீர் கால்வாய், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வல்லுநர் ஆலோசனையுடன் ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதே போல இதுவரை 7,500 இருக்கைகள் நிறுவப்பட்டுள்ளன.  197 பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.