தரமணி பாலிடெக்னிக் கல்லூரியை எஸ்எப்ஐ முற்றுகை
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி மீதே நடவடிக்கையா?
பாலிடெக்னிக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முறையான விசாரணை கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். சென்னை தரமணியில் அரசு பாலி டெக்னிக் கல்லூரி விடுதி மாணவிகள் 2 பேர், ஒரு வாரம் முன்பு வெளியே சென்றுள்ளனர். அதில், ஒரு மாணவி அன்றைய தினமும், மற்றொரு மாணவி மறுநாளும் விடுதிக்கு வந்துள்ளனர். மறுநாள் விடுதிக்கு வந்த மாணவி பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டு இருந்ததாகவும், எனவே, மாணவி களுக்கு மாற்றுச்சான்றிதழ் (டிசி) கொடுத்து, பெற்றோருடன் கல்லூரி முதல்வர் அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
விசாரணை இல்லை
இந்நிலையில், இந்த சம்பவத்தில் முறையான விசாரணை நடத்தி, குற்ற வாளிகளை தண்டிக்கக் கோரி செவ்வா யன்று (மார்ச் 25) கல்லூரி முன்பு மாண வர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். அப்போது, கல்லூரி முதல்வர், மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ. சம்சீர் அகமது, துணைச் செயலா ளர் ரா. பாரதி, தென்சென்னை மாவட்டத் தலைவர் அமர், செயலாளர் ச. ஆனந்த குமார் உள்ளிட்டோரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், மாணவர் சங்கத் தலைவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கல்லூரி முதல்வர் மழுப்பலான பதிலை அளித் துள்ளார்.
வழிகாட்டுதல்கள் மீறல்
இதையடுத்து, பாலியல் துன்புறுத்த லுக்கு உள்ளான மாணவியிடம் பின் பற்ற வேண்டிய அடிப்படையான வழி காட்டுதல்களை பின்பற்றவில்லை என்று கூறி மாணவர்கள் போராட் டத்தை தொடர்ந்தனர். வழக்கை விசா ரித்த விசாரணை அதிகாரி பதிலளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்த னர்.
மாணவர்கள் மீது தாக்குதல்
இதனிடையே போராட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் இணைந்தனர். பேச்சு வார்த்தை நடத்தாமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டவே, மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைந்தனர். அப்போது, தள்ளு முள்ளு ஏற்பட்டு, மாணவர்களை போலீசார் தாக்கியுள்ளனர். பின்னர், காவல்துறை அதிகாரிகள், கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர், மீண் டும் மாணவர் - மாதர் சங்கத் தலைவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அடையாளப்படுத்திய முதல்வர்
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சம்சீர் அகமது, “சட்டப்படி யாக மேற்கொள்ள வேண்டிய நடை முறைகள் எதையும் கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும் பின்பற்றவில்லை. சட்ட விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டுள்ளனர். சம்பவங்கள் தொடர்பாக எந்தவொரு முறையான விசாரணையும் நடக்கவில்லை; பாதிக்கப்பட்ட மாணவி யார் என்பதை வெளிப்படுத்தி, அவரது கல்வியை பாதிக்கும் வகையில் முதல்வர் நட வடிக்கை எடுத்துள்ளார். குற்றம் நடை பெறவும், குற்றவாளிகளுக்கு ஆதர வாகவும் கல்லூரி நிர்வாகம் - காவல் துறை செயல்பட்டுள்ளது. மார்ச் 27 அன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடை பெறும்” என்றார்.
உண்மையை மறைப்பதா?
“மாணவி காணாமல் போன அன்று இரவே காவல்நிலையத்தில் புகார் தெரி விக்கவில்லை. கல்லூரி முதல்வரும், காவல்துறையினரும் முரண்பாடான கருத்துக்களை கூறுகின்றனர். கல் லூரி நிர்வாகம், காவல்துறை இருவ ரும் இணைந்து உண்மையை மறைத் துள்ளனர். எனவே, நிகழ்ந்துள்ள தவறு மீது முறையான விசாரணை நடத்தா விடில் பெருந்திரள் போராட்டத்தை நடத்துவோம்” என்று மாதர் சங்க மாநில பொருளாளர் வ. பிரமிளா கூறினார்.